Published : 22 Oct 2021 09:32 AM
Last Updated : 22 Oct 2021 09:32 AM

100 கோடி தடுப்பூசி சாதனை; 100 நினைவுச் சின்னங்களை மூவர்ணத்தில் ஒளிரச் செய்த தொல்பொருள் ஆய்வு மையம்

இந்தியாவின் 100 கோடி தடுப்பூசிகள் மைல்கல் சாதனையைக் கொண்டாடும் வகையில் 100 நினைவுச் சின்னங்களை மூவர்ணத்தில் கலாச்சார அமைச்சகத்தின் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் ஒளிரச் செய்தது.

கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரானப் போரில் இடைவிடாது பங்களித்த கரோனா வீரர்களுக்கு மரியாதை மற்றும் நன்றி செலுத்துவதன் அடையாளமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தலங்களான டெல்லியில் உள்ள செங்கோட்டை, ஹுமாயுன் கல்லறை மற்றும் குதுப்மினார், உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா கோட்டை மற்றும் ஃபதேபூர் சிக்ரி, ஒடிசாவில் உள்ள கோனார்க் கோவில், தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரம் ரத கோவில்கள், கோவாவில் உள்ள புனித பிரான்சிஸ் ஆஃப் அசிசி தேவாலயம், கஜுராஹோ, ராஜஸ்தானில் உள்ள சித்தூர் மற்றும் கும்பல்கர் கோட்டைகள், பீகாரில் உள்ள பழங்கால நாளந்தா பல்கலைக்கழகம் மற்றும் குஜராத்தில் உள்ள தோலவீரா உள்ளிட்ட 100 இடங்கள் ஒளியூட்டப்பட்டன.

தொற்றுநோயைத் திறம்பட எதிர்கொண்டதற்காகவும், மனிதகுலத்திற்கு அவர்களின் தன்னலமற்ற சேவைகளுக்காகவும் கரோனா வீரர்கள், தடுப்பூசி வழங்குவோர், தூய்மைப் பணியாளர்கள், துணை மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர் போன்றவர்களுக்கு நன்றி தெரிவிக்க 100 நினைவுச்சின்னங்கள் 2021 (அக்டோபர் 21-ம் தேதி) நேற்றிரவு மூன்று வண்ணங்களில் ஒளிர்ந்தது

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதிலும், மூன்றாம் அலையை தடுப்பதிலும் தடுப்பூசி முக்கிய பங்கு வகித்தது. 100 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்கள் வழங்கியதன் மூலம் சீனாவைத் தவிர இந்த சாதனையைச் செய்துள்ள ஒரே நாடு இந்தியா ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x