Published : 21 Oct 2021 11:19 AM
Last Updated : 21 Oct 2021 11:19 AM
சொகுசுக் கப்பலில் நடந்த விருந்தில் தடை செய்யப்பட்ட போதை மருந்து பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கானை அவரின் தந்தை ஷா ருக் கான் இன்று முதல்முறையாகச் சிறைக்குச் சென்று சந்தித்தார்.
மும்பை கடற்பகுதியில் சொகுசுக் கப்பலில் நடைபெற்றகேளிக்கை விருந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக என்சிபிஅமைப்புக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கடந்த 3-ம் தேதி அந்தக் கப்பலில் என்சிபி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 20 பேரை என்சிபி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆர்யன் கான் தற்போது மும்பை ஆர்தூர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி ஆர்யன் கான் உள்ளிட்டோர் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த் மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஆர்யன் கானை முதல்முறையாக அவரின் தந்தை ஷாருக் கான் இன்று நேரடியாகச் சந்தித்துப் பேசினார்.
மும்பை ஆர்தர் சிறைக்கு இன்று காலை 9 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வந்த நடிகர் ஷாருக்கான், 9.35 மணிக்கு சிறையிலிருந்து வெளியேறினார். ஏறக்குறைய 10 நிமிடங்கள் தனது மகன் ஆர்யன் கானுடன் ஷாருக் கான் பேசியதாகச் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஷாருக்கான் மும்பை ஆர்தர் சிறைக்கு ஷாருக் கான் வருகை அறிந்ததும் ஏராளமான ஊடகத்தினர் குவிந்துவிட்டனர். இதனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, கூடுதல் போலீஸார்பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக இதற்கு முன் சிறையில் உள்ள கைதிகளை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சந்திக்க அனுமதியில்லை. ஆனால் இன்று காலை முதல் சந்திக்க அனுமதியளிக்கப்பட்ட நிலையில் ஷாருக்கான் தனது மகனைச் சந்தித்து சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT