Published : 18 Oct 2021 03:09 AM
Last Updated : 18 Oct 2021 03:09 AM
கர்நாடகா போலீஸார் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு காவி சால்வைகள் அணிந்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் நவராத்திரி பண்டிகை தசரா விழாவாக சிறப்பாக கொண்டாடப்படும். இதை முன்னிட்டு விஜயபுரா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டென்ட் அனந்த் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஒரு காவல் நிலையம் முன்பு பைஜாமா குர்த்தா அணிந்து கழுத்தில் காவி சால்வைகள்அணிந்தபடி விஜயதசமியன்று குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருப்பதுடன் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பலர் ஆளும் பாஜக மற்றும் இந்து அமைப்பினரைப் போல போலீஸார் காவி நிறத்தில் சால்வை அணிந்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடுநிலையுடன் சட்டத்தைக் காப்பாற்றும் அரசின் பிரதிநிதிகளாக செயல்பட வேண்டிய போலீஸாரின் இந்த நடவடிக்கையை எதிர்பார்க்கவில்லை என்றும் பாஜக அரசின் சர்வாதிகார ஆட்சிக்கும் போலீஸார் மக்களுக்கு எதிராக செயல்படுவதற்கும் இது உதாரணம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். போலீஸார் காவி சால்வை அணிந்து கொண்டிருப்பதை ஆதரித்தும் பலர் கருத்துக்களை கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT