Published : 17 Oct 2021 10:04 AM
Last Updated : 17 Oct 2021 10:04 AM
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்2022ம் ஆண்டு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நேற்று நடந்தது முடிந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் அமைப்பு ரீதியாக பல்வேறு நிலைகளிலும் தேர்தல் தேதிக்கான ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து, அதிகாரபூர்வமாக வெளியிடப்ட்டது.
காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் முடிந்தபின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேரத்ல் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதிவரை நடக்கும். அமைப்புரீதியான தேர்தலில் பங்கேற்பவர்கள் 2021 நவம்பர் 1ம்தேதி முதல் 5ரூபாய் செலுத்தி 2022மார்ச் 31ம் தேதிக்குள் தங்களைப் பதிவு செய்யலாம்.
தேர்தலில் யார் போட்டியிடலாம், அதற்கான தகுதியான நபர்கள் குறித்த விவரங்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி விரைவில் வெளியிடுவாரக்ள். 2022ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதிக்கு முன்பாக இந்த விவரங்கள் வெளியிடப்படும்.
முதன்மைக் குழு, மண்டலக் குழு தலைவர் தேர்தல், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மண்டலக் குழுத் தலைவர், நிர்வாகக் குழு, உறுப்பினர் ஆகியவற்றுக்கான தேர்தல் 2022 ஏப்ரல் 16 முதல் மே 31ம் தேதிக்குள் நடத்தப்படும்.
மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், நிர்வாகக் குழு தேர்தல் 2022 ஜூன் 1ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் நடக்கும். மாநில காங்கிரஸ் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்தல் ஜூலை 21ம் தேதிமுதல் ஆகஸ்ட்20ம் தேதிக்குள் நடத்தப்படும்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் 2022 ஆகஸ்ட் 21ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்.
காங்கிஸ் காரியக்கமிட்டி உறுப்பினர்கள், கட்சியின் மற்ற பிரிவின் உறுப்பினர்களுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும். கட்சியின் உட்கட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படும். தொடர்ந்து அளிக்கப்படும்
இந்த பயிற்சியில் காங்கிரஸ்க ட்சித் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்.இதில் கட்சியின் கொள்கைகள், சித்தாந்தங்கள், காங்கிரஸ் தொண்டரிடம் எதிர்பார்ப்பு, சாமானிய மக்களுக்கு சொல்ல வேண்டிய செய்தி, தேர்தல் மேலாண்மை, பாஜக அரசின் தோல்விகள், பாஜகவின் பிரச்சாரத்துக்கும், குற்றச்சாட்டுக்கும் பதிலடி ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
நவம்பர் 14 ம் தேதி முதல் 19ம் தேதிவரை பணவீக்கம், விலைவாசி உயர்வு, உள்ளிட்ட மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம், பயிலிரங்கு மாநில, மாவட்ட, மண்டல அளவில் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு வேணுகோபால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT