Published : 15 Oct 2021 11:23 AM
Last Updated : 15 Oct 2021 11:23 AM

சீன எல்லையில் 13,800 அடி உயரத்தில் செலா குகை சாலை: இறுதிகட்ட  பணிகள்

புதுடெல்லி

அருணாச்சல பிரதேசத்தில் எல்லைப்பகுதியில் 13,800 அடி உயரத்தில் அமைந்துள்ள செலாவில், 317 கிமீ நீளமுள்ள பலிபாரா-சர்துவார்-தவாங் குகை சாலையின் இறுதிப்பணிகள் நடந்து வருகின்றன.

அருணாச்சல பிரதேச மாநிலம், செலா கணவாய் சாலை உலகின் இரண்டாவது மிகப்பெரிய உயரமான சாலை. கடல் மட்டத்திலிருந்து 13,800 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த சாலை தவாங் பகுதியை நாட்டின் பிற பகுதியுடன் இணைக்கிறது.

சீலா கணவாய் வழியே தவாங் மற்றும் மேற்கு கவங் மாவட்டங்களை இணைக்கும் குகைப் பாதைப் பணிகள் நடந்து வருகின்றன.

இதில் இறுதிக் கட்டமாக, மலை வாயில் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி வாயிலாக இறுதிக் கட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அத்துடன், எல்லை சாலைகள் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்த, 20 ஆயிரம் கி.மீ., மோட்டார் சைக்கிள் பயணத்தையும் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங் கூறியதாவது:

அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் அமைந்துள்ள செலா சுரங்கப்பாதை, தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதிலும், பிராந்தியத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும் .

அருணாசலப் பிரதேசத்தின் மேற்கு காமெங், கிழக்கு காமெங் மற்றும் தவாங் மாவட்டங்களை இணைக்கும் விதமாக 13,800 அடி உயரத்தில் அமைந்துள்ள செலா, 317 கிமீ நீளமுள்ள பலிபாரா-சர்துவார்-தவாங் (பிசிடி) சாலை சுரங்கபாதையாக அமைக்கப்பட்டுள்ளது.

பயண நேரத்தை இது குறைப்பதோடு, தவாங்கிற்கு அனைத்து வானிலைகளிலும் இணைப்பை வழங்குகிறது. தீவிர வானிலையை எதிர்கொண்டு சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் விமானநிலையங்களை சாதனை உயரங்களில் அமைப்பதன் மூலமும், தொலைதூர பகுதிகளை இணைப்பு வரைபடங்களில் தெரியப்படுத்துவதன் மூலமும் தேசத்தின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வரும் எல்லையோர சாலைகள் நிறுவனத்தை பாராட்டுகிறேன்.

எல்லை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் எல்லையோர சாலைகள் நிறுவனத்தின் முயற்சிகள் ஆயுதப்படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்தியுள்ளதோடு, தொலைதூரப் பகுதிகளில் சுற்றுலாவை ஊக்குவித்து உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த அதிநவீன சுரங்கப்பாதை தவாங்கிற்கு மட்டுமல்ல, முழு மாநிலத்திற்கும் ஒரு உயிர்நாடியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x