Published : 12 Oct 2021 06:40 PM
Last Updated : 12 Oct 2021 06:40 PM
டெல்லியில் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், அவரிடமிருந்து ஏ.கே.47 மற்றும் கையெறி குண்டுகளை சிறப்புப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
டெல்லியின் லக்ஷ்மி நகரில் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதிக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்,ஆயுத சட்டம் மற்றும் பிற சம்பந்தப்பட்ட விதிகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீவிரவாதியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஏஎன்ஐ இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 12, 2021) கூறியுள்ளதாவது:
''டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு, ரமேஷ் பார்க், லக்ஷ்மி நகரில் இருந்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதியை கைது செய்துள்ளது.
அவர் பாகிஸ்தானின் பஞ்சாபில் வசித்துவந்த முகமது அஸ்ரஃப் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் இந்திய நாட்டவரின் போலி அடையாள அட்டை ஒன்றுடன் டெல்லியில் தங்கியிருந்துள்ளார். அவரிடமிருந்து ஒரு பத்திரிகை மற்றும் 60 சுற்றுகள் கொண்ட ஒரு ஏகே -47 தாக்குதல் துப்பாக்கி, ஒரு கை வெடிகுண்டு, 50 சுற்றுகள் கொண்ட 2 அதிநவீன துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன,''
இவ்வாறு ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி போலீஸார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், டெல்லியில் பிடிப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி போலி ஆவணங்களுடன் வசித்து வந்ததாகவும், பண்டிகை காலங்களில் நகரம் முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டபோது இந்த தீவிரவாதி சிக்கியதாகவும், மிகப்பெரிய சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT