Published : 12 Oct 2021 03:12 AM
Last Updated : 12 Oct 2021 03:12 AM

ஸ்விஸ் வங்கியில் கருப்புப் பணம் இந்தியாவிடம் 3-வது பட்டியல் ஒப்படைத்தது ஸ்விஸ் அரசு

புதுடெல்லி/பெர்ன்

ஸ்விஸ் வங்கியில் கருப்பு பணம்முதலீடு செய்துள்ள இந்தியர்களின் 3-வது பட்டியலை ஸ்விஸ் வங்கி இந்திய அரசுக்கு அளித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் மூலம் ஆண்டுக்கு ஒரு முறை இதுபோன்று பட்டியலை ஸ்விஸ் அரசு அளித்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஸ்விஸ் அரசிடமிருந்து விவரங்களை இந்திய அரசு பெற்றுள்ளது. கடந்த மாதம் இந்தவிவரங்கள் இந்திய அரசிடம் அளிக்கப்பட்டதாகவும், அடுத்தகட்ட விவர பட்டியல் செப்டம்பர் 2022-ல் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விதம் பெறப்படும் விவரத்தின் அடிப்படையில் கருப்புப் பணத்தை மறைத்து வைத்துள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்கு தொடர மிகவும் எளிதாக உள்ளதாக வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இப்போது அளிக்கப்பட்ட பட்டியலில் பெரும்பாலும் தொழிலதிபர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் சில தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

ஸ்விஸ் பெடரல் நிர்வாகம் அளித்த பட்டியலில் தனி நபர் பற்றிய விவரம், கணக்கு, போட்டுள்ள நிதி அளவு, பெயர், முகவரி, எந்த நாட்டைச் சேர்ந்தவர், வீட்டு முகவரி, வரி எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுவரையில் 100-க்கும் அதிகமான இந்திய குடியுரிமை பெற்றவர்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. நிதி முறைகேடு, வரி ஏய்ப்பு உள்ளிட செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்து விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x