Published : 25 Mar 2016 09:35 AM
Last Updated : 25 Mar 2016 09:35 AM
நடிகர் ரஜினியின் நண்பரான மோகன் பாபு, தெலுங்கு திரைப்பட உலகின் ‘கலெக்ஷன் கிங்’ என ரசிகர்களால் அழைக்கப்படு கிறார். சுமார் 500 திரைப்படங் களுக்கும் மேல் நடித்துள்ள இவர், திருப்பதி அருகே வித்யா நிகேதன் என்ற பெயரில் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவரது மகன்கள் விஷ்ணு, மனோஜ் மற்றும் மகள் லட்சுமி பிரசன்னா ஆகியோரும் திரைப் படங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், லட்சுமி பிரசன்னா ஒரு தனியார் தெலுங்கு தொலைக் காட்சி நிகழ்ச்சிக்காக, திரைப்பட உலகில் பிரபலமானவர்களைக் கொண்டு மக்களின் நிஜ வாழ்க்கையில் பிரதிபலிக்கும் கேரக்டர்களை செய்ய சொல்லி, அதன் மூலம் வரும் வருமானத்தை அறக்கட்டளைக்கு வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சிக்காக நடிகர் ராணா, மார்க்கெட்டில் மூட்டை தூக்கி கூலி வேலை செய்தார். நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான அகில், ஆட்டோ ஓட்டினார். நடிகை ஸ்ரேயா சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றினார். நடிகை ராகுல் பிரீத் சிங் மார்க்கெட்டில் காய்கறி விற்றார்.
அந்த வகையில் லட்சுமி பிரசன்னா, தனது தந்தை மோகன் பாபுவை களம் இறக்கி உள்ளார். இதன்படி சந்திரகிரி அருகே உள்ள தனது வித்யா நிகேதன் கல்லூரிக்கு வெளியே மோகன் பாபு நேற்று காலையில் இட்லி, தோசை விற்றார்.
இதைக் கண்டு அந்த வழியாக சென்ற பலர் ஆச்சர்யமடைந்தனர். உடனே அந்தக் கடைக்கு சென்று இட்லி, தோசை வாங்கி சாப்பிடத் தொடங்கினர். ஆனால் ஒரு தோசை ரூ.100, இட்லி , பூரி, வடை, காபி ரூ.50-க்கு விற்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT