Published : 07 Oct 2021 06:26 PM
Last Updated : 07 Oct 2021 06:26 PM

முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ. 500 அபராதம்; கரோனா கட்டுப்பாட்டு விதிகள் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு: ரயில்வே அறிவிப்பு

புதுடெல்லி

ரயில்வே அமைச்சகம் தனது கரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது அடுத்த அறிவிப்பு வரும் வரை ரயில்வே வளாகத்திலும் ரயில்களிலும் முகக்கவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே எச்சரித்துள்ளது.

கரோனா தாக்கத்தால் ரயில் போக்குவரத்து ரத்தாகியது. மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கிய நிலையில் குறைந்தளவாக தற்போது ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. கரோனா நோய் தாக்கம் குறைந்து வரும் நிலையில் ரயில் போக்குவரத்து மெல்ல மெல்ல சீரடைந்து வருகிறது.

எனினும் ரயில்வே வளாகத்திலும் ரயில்களிலும் கரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மீறினால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பயணிகள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பயணிக்கிறார்களா என ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயிலில் டிக்கெட் பரிசோதகர் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் வரும் நேரம் வரை பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து பிளாட்பாரங்களில் அமர அனுமதிக்கப்படுகின்றனர்.

ரயில் நிலையம் தினந்தோறும் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, பயணிகள் கைகளை சுத்தம் செய்துகொள்ள சானிடைசர் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மாஸ்க் அணியாமல் இருத்தல், துப்புதல் போன்ற செயல்களுக்கு, 2012 ஆம் ஆண்டின் இந்திய ரயில்வே ரயில்வே வளாகத்தில் தூய்மையை பாதிக்கும் நடவடிக்கைகளுக்கான அபராத விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படுகிறது.

கரோனா தொற்றுநோய் தொடர்பான சுகாதார பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே சமைத்த உணவு சேவையை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக ரயில்களில் ரெடி டு ஈட் உணவு வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் ரயில்வே அமைச்சகம் தனது கரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது அடுத்த அறிவிப்பு வரும் வரை ரயில்வே வளாகத்திலும் ரயில்களிலும் முகக்கவசம் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x