Published : 06 Oct 2021 05:40 PM
Last Updated : 06 Oct 2021 05:40 PM
பிஎம் கேர்ஸ் நிதியின் கீழ் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை நாளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதற்கு பின் இந்தியாவின் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தித் திறனை அதிகரிக்க அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் தற்போது வரை பிஎம் கேர்ஸ் மூலம் மொத்தம் 1224 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1100-க்கும் அதிகமான நிலையங்கள் உற்பத்தியைத் தொடங்கி விட்டன.
இவற்றில் நாளொன்றுக்கு 1750 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி ஆகிறது. இத்துடன் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்பட உள்ளன.
மலைப்பகுதிகள், தீவுகள், சிக்கலான நிலைமை கொண்ட பகுதிகள் ஆகியவற்றின் சவால்களை கையாள்வதுடன் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
7,000-க்கும் அதிகமான ஊழியர்களுக்கு பயிற்சி அளித்ததன் மூலம் இந்த உற்பத்தி நிலையங்களின் இயக்கம் மற்றும் பராமரிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒருங்கிணைக்கப்பட்ட இணையப் பக்கத்தின் மூலம் இவற்றின் இயக்கம் மற்றும் செயல்பாட்டை நிகழ் நேர கண்காணிப்புக்கான கருவிகளுடன் இவர்கள் செயல்பட்டனர்.
35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
உத்தரகாண்ட் ஆளுநர் மற்றும் முதல்வருடன் மத்திய சுகாதார அமைச்சரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT