Published : 06 Oct 2021 12:08 PM
Last Updated : 06 Oct 2021 12:08 PM
ராமானந்த் சாகரின் ராமாயணத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் அரவிந்த் திரிவேதி (வயது 82) காலமானார்.
ராமானந்த் சாகர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு உருவான தொடர் ராமாயணம் இந்தியாவில் அதிக பார்வையாளர்களால் பார்க்க்பட்டு பெரும் சாதனை படைத்தது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இந்த தொடரை காண ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டினர்.
இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது. இந்த தொடரில் ராமனாக, அருண் கோவில் நடித்திருந்தார். சீதையாக தீபிகா சிக்கலியா, லட்சுமணன் வேடத்தில் சுனில் லஹிரி, அனுமனாக தாராசிங் நடத்திருந்தனர்.
மிக முக்கியமான வில்லன் வேடமான ராவணன் வேடத்தி நடித்தவர் அரவிந்த் திரிவேதி. இந்ததொடரில் ராவணன் வேடத்தில் அரவிந்த் திரிவேதி தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி அந்தகாலத்தில் பெரும் வரவேற்பை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து இந்தி, குஜராத்தி படங்களில் நடித்து வந்தார். சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பின்னர் பாஜகவில் அவர் இணைந்தார். குஜராத் மாநிலம் சபர்கந்தா மக்களவைத் தொகுதியில் 1991 ஆம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
மும்பை காந்திவெலியில் வசித்துவந்த இவர் வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார். அவரது மறைவுயடுத்து
சமூக ஊடகங்களில், நடிகர்கள் அருண் கோவில் மற்றும் சுனில் லஹ்ரி ஆகியோர் அரவிந்த் திரிவேதியை நினைவு கூர்ந்துள்ளனர்.
அருண் கோவில் பதிவிட்டுள்ள இரங்கல் ட்வீட்டில் ‘‘மனதை வருத்தும் பதிவு இது. அரவிந்த் திரிவேதி என் அன்பு நண்பர். அவரது மறைவு என்னை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது’’ எனக் கூறியுள்ளார்.
சுனில் லஹ்ரி தனது இரங்கல் பதிவில் கூறுகையில் ‘‘ராமாயணத்தின் ராவணன் திரிவேதி இனி நம்மிடையே இல்லை. அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். என்னால் பேச இயலவில்லை. எனது வழிகாட்டி, நலம் விரும்பி மற்றும் பண்புள்ள தந்தையை இழந்துவிட்டேன்’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT