Published : 05 Oct 2021 03:51 PM
Last Updated : 05 Oct 2021 03:51 PM

சொத்துகள் அனைத்தும் ஆண்கள் பெயரில் தான் இருக்க வேண்டுமா? - பிரதமர் மோடி கேள்வி

லக்னோ

அனைத்து சொத்துக்களும், வீட்டுக்குத்தேவையான அனைத்தும் ஆண்களின் பெயர்களிலேயே இருக்கின்றன, இதில் சில மாற்றம் தேவை என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

உ.பி., மாநிலம் லக்னோவில் 'ஆசாதி75 - புதிய நகர்ப்புற இந்தியா மற்றும் கண்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்து, கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் பிரதமர் மோடி நிகழ்ச்சியி்ல உரையாற்றியதாவது:

அனைத்து சொத்துக்களும் வீட்டுக்குத்தேவையான அனைத்தும் ஆண்களின் பெயர்களிலேயே இருக்கின்றன. இதில் சில மாற்றம் தேவை. இதன் மீது மேற்கொள்ளப்பட்ட உறுதியான நடவடிக்கை மூலம் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 80 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் பெண்களின் பெயரில் அல்லது கணவன்-மனைவி இருவரையும் உரிமையாளர்களாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

அன்னை பாரதிக்கு மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்த அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பாபா சாகேப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தை அடல் பிகாரி வாஜ்பாய் இருக்கை அமைக்கப்பட்டிருப்பது இன்று எனது நினைவில் நிலைத்துள்ளது


பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், முன்பைவிட அதிக எண்ணிக்கையிலான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நகரங்களில் 1.13 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

அவற்றில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஏற்கெனவே கட்டப்பட்டு ஏழைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வலுவான வீடுகள் இல்லாமல் சேரிகளில் வசித்த 3 கோடி நகர்ப்புற ஏழைக் குடும்பங்கள், லட்சாதிபதிகளாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், நாட்டில் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் விலையை உங்களால் யூகிக்க முடியும். இந்த மக்கள் லட்சாதிபதிகளாகியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் தற்போதைய ஆட்சிக்கு முந்தைய ஆட்சிகளில் இருந்த அரசுகள், திட்டங்களை அமல்படுத்துவதில் காலம் தாழ்த்தினர்.

18,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. ஆனால் அப்போது 18 வீடுகள் கூட கட்டப்படவில்லை. யோகி ஆதித்யநாத் தலைமையின் கீழ் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன், 9 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், நகர்ப்புற ஏழைகளிடம் ஒப்படைக்கப்பட்டன மற்றும் 14 லட்சம் வீடுகள் கட்டும் பணி தற்போது பல நிலைகளில் உள்ளன. இந்த வீடுகளில் நவீன வசதிகள் உள்ளன.

நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்னைகள் மற்றும் சவால்களை சமாளிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்துள்ளது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் (RERA) முக்கியமான நடவடிக்கை. இந்தச் சட்டம், முழு வீட்டுவசதித் துறையையும் அவநம்பிக்கை மற்றும் மோசடியிலிருந்து வெளியேற உதவியது மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் உதவியது மற்றும் அதிகாரம் அளித்துள்ளது.

எல்இடி தெருவிளக்குகள் பொருத்தப்பட்டதன் மூலம், உள்ளாட்சி அமைப்புகள், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.1000 கோடி சேமிக்கின்றன. தற்போது, இந்த தொகை, இதர வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எல்இடி விளக்குகள், நகரங்களில் வசிக்கும் மக்களின் மின்சாரக் கட்டணத்தையும் வெகுவாக குறைத்துள்ளது.

தொழில்நுட்பம் காரணமாக, நகர்ப்புறங்களில் கடந்த 6-7 ஆண்டுகளில், மிகப் பெரிய உருமாற்றம் ஏற்பட்டுள்ளது என பிரதமர் கூறினார். நாட்டில் இன்று 70-க்கும் மேற்பட்ட நகரங்களில் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டுபாட்டு மையங்களின் அடிப்படை தொழில்நுட்பம்.

பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ், சாலையோர வியாபாரிகள் வங்கிகளுடன் இணைந்துள்ளனர். இந்தத் திட்டம் மூலம், ரூ.2,500 கோடிக்கும் மேற்பட்ட நிதியுதவி, 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில், 7 லட்சத்துக்கும் மேற்பட்ட உத்தரப் பிரதேச பயனாளிகள் ஸ்வாநிதி திட்டத்தின் பயனை பெற்றுள்ளனர். டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்கு, வியாபாரிகளை பாராட்டுகிறேன்.


நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இந்திய மெட்ரோ சர்வீஸ் வேகமாக விரிவடைந்து வருகின்றன. 2014ம் ஆண்டில், 250 கி.மீ தூரத்துக்கு குறைவான வழித்தடங்களில் மெட்ரோ சேவைகள் பயன்படுத்தப்பட்டன. இன்று 750 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. தற்போது 1000 கி.மீக்கும் அதிகமாக மெட்ரோ ரயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x