Published : 08 Mar 2016 02:23 PM
Last Updated : 08 Mar 2016 02:23 PM
தெற்கு காஷ்மீர் அஷ்முகம் பகுதியில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் இருவர் காயமடைந்தனர்.
ஸ்ரீநகருக்குத் தெற்கே 80கிமீ தொலைவில் அஷ்முகம் பகுதியில் உள்ள ஐரம் காலனியில் ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படை மற்றும் சிறப்புப் போலீஸ் படையினர் ஆகியோர் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, ஆனால் ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்ற விவரங்களை ராணுவத் தலைமைச் செயலகம் இன்னும் அளிக்கவில்லை.
இரண்டு இளைஞர்கள் உடலில் தோட்டா பாய்ந்தது; கழுத்தில் தோட்டா பாய்ந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அங்கு ஆர்பாட்டம் மூண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இப்பகுதியில் கூடுதல் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளது. அஷ்முகம் பகுதியில் ஊரடங்கு நிலை போன்ற கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
தீவிரவாதிகளைத் தேடும் பணியின் போது உள்ளூர் இளைஞர்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசித் தாக்கும் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT