Published : 02 Oct 2021 01:32 PM
Last Updated : 02 Oct 2021 01:32 PM
ஜம்மு காஷ்மீர் முழுதுவதும், மக்களிடையே தேசபக்தியை வளர்க்க சங்பரிவாரத் தொண்டர்கள் உழைக்க வேண்டும். அமைதியான சமூகத்தை உருவாக்க மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 4 நாட்கள் பயணமாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வியாழக்கிழமை சென்றார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் முதல்முறையாக மோகன் பாகவத் அங்கு சென்றுள்ளார்.
ஜம்மு நகரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகமான கேசவ் பவனில் நிர்வாகிகளை நேற்றுச் சந்தித்த மோகன் பாகவத் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
அது குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், பிரசாரகர்கள் ஆகியோரை மோகன் பாகவத் சந்தித்து மாநிலத்தின் வளர்ச்சி, மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குதல், தேசபக்தியை வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் மக்களிைடயே தேசபக்தியை வளர்க்கவேண்டும் என வலியுறுத்தினார்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும்ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், ஆர்எஸ்எஸ் சாஹாஸ் தொடர்பை ஒவ்வொரு மூலையிலும் பரப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆர்எஸ்எஸ் வலுவாக இருக்கும் கதுவா பகுதியில் புதிய கிளைகளை உருவாக்கவும் கேட்டுக்கொண்டார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தத்துவங்கள், செய்திகளை ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமல்லாமல், ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஜம்மு காஷ்மீரில் பல கிராமங்களில் செய்துவரும் மேம்பாட்டுப் பணிகளையும் கேட்டறிந்தார். கரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும், முறியடிக்கவும் முழுமையான திட்டம், பயிற்சியை நடத்தவும் கேட்டுக்கொண்டார்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT