Published : 25 Sep 2021 02:43 PM
Last Updated : 25 Sep 2021 02:43 PM
பிரதமர் மோடியின் புகைப்படம், சப்கா சாத், சப்கா விகாஸ் என்ற வாசகம் ஆகியவற்றை நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திலிருந்து நீக்க வேண்டும் என்று தேசிய தகவல் மையத்துக்கு (என்ஐசி) உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ மின்அஞ்சலில் பிரதமர் புகைப்படம், வாசகம் இருப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் பதிவாளருக்கு வியாழக்கிழமை மாலை தெரியவந்தது.
இதையடுத்து, பிரதமர் மோடியின் புகைப்படம், வாசகங்களை நீக்க உடனடியாக என்ஐசி அமைப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மின்அஞ்சலில் அடியில் குறிப்பிடப்பட்டதற்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் உச்ச நீதிமன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மின்அஞ்சலில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருந்த இடத்தில், உச்ச நீதிமன்றத்தின் புகைப்படத்தை வைக்கவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சையாவது புதிது அல்ல. ஏற்கெனவே கரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் புகைப்படம் இருப்பது குறித்து சர்ச்சை எழுந்தது.
கரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் புகைப்படம் இருந்தால், கரோனா இறப்புச் சான்றிதழிலும் மோடியின் புகைப்படத்தை பதிவிட வேண்டும் என என்சிபி கட்சியின் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் கேள்வி எழுப்பியிருந்தார்.
வாக்காளர்களைக் கவர்வதற்காக தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இருக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மத்திய அரசு இது குறித்து கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கரோனா சான்றிதழில் பிரதமர் புகைப்படம் இருந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT