Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM
திருப்பதியில் சர்வ தரிசன டிக்கெட் கிடைக்காததால் ஆர்ப்பாட்டம் செய்த தமிழக பக்தர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கடந்த திங்கட்கிழமை இரவு முதல் தினந்தோறும் 8 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறையில் வழங்கப் பட்டு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் இந்த டிக்கெட்டுகளை பெறுவதற்கு தினந்தோறும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தபடி இருந்தனர்.
இதனால் கூட்டம் வருவதை தவிர்ப்பதற்காக தேவஸ்தான அதிகாரிகள் அடுத்தடுத்த நாட் களுக்கு உண்டான டிக்கெட்களை தொடர்ந்து வழங்கி வந்தனர்.
நேரடியாக வந்து டிக்கெட் பெறுவதற்காக கூட்டம் சேருவதைத் தவிர்க்க ஆன்லைனில் தினந்தோறும் 8 ஆயிரம் டிக்கெட்டுகள் என இலவச தரிசன டிக்கெட்டுகளை இன்று முதல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு நாளை 26-ம்தேதி முதல் தரிசனத்திற்கு அனு மதிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை இரவு வரை சுவாமி தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன அனைத்து டிக்கெட்டுகளும் திருப்பதியில் நேற்று இரவே வழங்கப்பட்டுவிட்டது. இதனை அறியாத பக்தர்கள் னிவாசம் பக்தர்கள் ஓய்வு அறை முன்பு இலவச தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்காக அதிக அளவில் குவிந்தனர். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்களின் எண்ணிக்கையே அதிக அளவில் இருந்தது.
கரோனா பரவல் காரணமாக கூட்டம் சேருவதை தவிர்க்க ஏற்கனவே டிக்கெட்டுகள் வழங் கப்பட்ட நிலையில், தற்போது இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க முடியாது என தேவஸ்தான அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.ஆயினும் பக்தர்கள் அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், தேவஸ் தான அதிகாரிகளுக்கும், பக்தர் களுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து போலீஸார் தமிழகத்தை சேர்ந்த 15 பக்தர்களை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT