Published : 24 Sep 2021 04:45 PM
Last Updated : 24 Sep 2021 04:45 PM
2019-20-ம் ஆண்டுக்கான நாட்டு நலப் பணித் திட்ட விருதுகளை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி காட்சி வாயிலாக இன்று வழங்கினார்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், என்எஸ்எஸ் அமைப்புகள், அதிகாரிகள், தொண்டர்கள் சமூகத்துக்கு ஆற்றிய தன்னார்வ சேவையின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிப்பதுதான் இந்த விருதுகளின் நோக்கம். இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
மனித வாழ்க்கையின் கட்டிடம், மாணவர் வாழ்க்கை என்ற அடித்தளத்தில்தான் கட்டப்படுகிறது. கற்றல் என்பது, வாழ்க்கை முழுவதுமான நடைமுறை என்றாலும், அடிப்படை ஆளுமை வளர்ச்சி மாணவர் பருவத்தில் தொடங்குகிறது.
அதனால்தான், நாட்டு நலப்பணித் திட்டத்தை ஒரு தொலைநோக்கு திட்டமாக நான் கருதுகிறேன். இதன் மூலம் மாணவர்கள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களிலேயே, சமூகத்துக்கும், நாட்டுக்கும் சேவையாற்றும் வாய்ப்பை பெற முடியும்.
இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT