Published : 10 Feb 2016 09:03 AM
Last Updated : 10 Feb 2016 09:03 AM
ஹைதராபாத் நகரில் 3 மருத்துவர் களிடையே நடந்த வாக்குவாதத் தில் நேற்று முன்தினம் மாலை சசிகுமார் எனும் மருத்துவர் உதய் குமார் எனும் மற்றொரு மருத்துவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தலைமறைவானார். இந்நிலையில் சசிகுமார் ஒரு பண்ணை வீட்டில் தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹைதராபாத் சைதன்யபுரி பகுதியை சேர்ந்த டாக்டர் சசிகுமார், மாதாபூரை சேர்ந்த டாக்டர்கள் உதய் குமார், சாய் குமார் ஆகிய மூவரும் மாதபூரில் ரூ. 15 கோடி செலவில் ‘லாரல்’ மருத்துவ மனையை கட்ட தீர்மானித்தனர். இதற்காக சசிகுமார் ரூ. 75 லட்சம், உதய் குமார் ரூ. 3 கோடி, சாய் குமார் ரூ. 2.9 கோடி முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
அந்த மருத்துவமனையில் சசிகுமார் இயக்குநராக மட்டுமே செயல்பட்டுள்ளார். மற்ற இரு வரும் நிர்வாக இயக்குநர்களாக இருந்தனர். இதனால் சசிகுமார் மன உளைச்சலுக்கு ஆளானார்.
கடந்த திங்கள்கிழமை மாலை ஹிமாயத் நகர் பகுதியில் ஒரு காரில் மூவரும் அமர்ந்து இது தொடர்பாக பேசிக்கொண்டிருந்த னர். அப்போது பின் சீட்டில் அமர்ந் திருந்த சசி குமார், முன் சீட்டில் இருந்த உதய் குமார் மீது தனது துப்பாக்கியால் ஒரு முறை சுட்டதாக கூறப்படுகிறது.
இதில் உதய் குமார் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனடியாக சசி குமார் மற்றும் சாய் குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் சுதாரித்து எழுந்த உதய் குமார், அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக சேர்ந்தார். அந்த மருத்துவமனை நிர்வாகத்தி னர் கொடுத்த தகவலின் பேரில் நாராயண கூடா போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே உதய் குமாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கழுத்தில் பாய்ந்த தோட்டா அகற்றப்பட்டது.
தப்பி ஓடிய சசிகுமார் தனது குடும்ப நண்பரான சந்திரகலாவை சந்தித்து, நக்கன பல்லியில் உள்ள ஒரு பண்ணை வீட்டிற்கு சென்றுள் ளார். அவரிடம், தான் இந்த கொலையை செய்யவில்லை என கூறி உள்ளார். இரவு தனது வீட் டுக்குத் திரும்பிய சந்திரகலா, பஞ்ச குட்டா போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பஞ்சகுட்டா துணை ஆணையர் கமலாசன் ரெட்டி தலைமையிலான போலீஸார் பண்ணை வீட்டுக்குச் சென்றனர். அதற்குள் டாக்டர் சசி குமார் தன்னைத்தானே துப்பாக்கி யால் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில், ‘தன்னை உதய் குமார் மோசம் செய்ததாகவும், அவரைக் கொலை செய்யவில்லை என்றும், போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வ தாகவும்’ குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவர் தற்கொலை செய்து கொள்வில்லை, இது திட்ட மிட்ட கொலை என சசி குமாரின் மனைவி காந்தி புகார் அளித்துள் ளார். இது குறித்து நாராயண குட்டா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT