Published : 20 Sep 2021 07:25 PM
Last Updated : 20 Sep 2021 07:25 PM
கோவிட்-19 பெருந்தொற்றின் காலத்திலும் நமது பொருளாதாரம் புத்துயிர் பெற்று ஏற்றுமதிகள் கணிசமாக அதிகரித்து வருவதாக பியூஷ் கோயல் கூறினார்.
ஏற்றுமதியாளர்களுக்கு உதவவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிக்கவும் 24 மணி நேரம் இயங்கும் உதவி எண்ணை அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பாக நடைபெறும் சுதந்திர தின 75-வது ஆண்டு நாடு தழுவிய கொண்டாட்டங்களின் தொடக்க விழாவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ஜவுளி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், தரம், உற்பத்தி, திறமை மற்றும் புதுமையின் அடையாளமாக இந்தியாவை மாற்றுவதே நமது முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார்.
75 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியைப் போற்றும் வகையில் நாடு முழுவதும் 7 நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகளை அமைச்சகம் நடத்த உள்ளது என்றும், தொழில்துறை வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி நடைமுறைகளை உத்தரப் பிரதேசம் மேம்படுத்தியிருப்பதன் வாயிலாக அந்த மாநிலத்தில் வர்த்தகம் மேற்கொள்வது எளிதானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டு உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு தெரிவித்தார்.
இந்தியாவை உலக தலைமையகமாக உருவாக்குவதற்கான பங்களிப்பு மற்றும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டத்தை இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கோவிட்-19 பெருந்தொற்றின் காலத்திலும்நமது பொருளாதாரம் புத்துயிர் பெற்று ஏற்றுமதிகள் கணிசமாக அதிகரித்து வருவதாக கோயல் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT