Published : 20 Sep 2021 11:54 AM
Last Updated : 20 Sep 2021 11:54 AM

அரசியல் தலைவர்களை நாங்கள் சந்திப்பது ஆட்சியில் தலையிடுவது என அர்த்தமில்லை: மோகன் பாகவத்

ஆர்எஸ்எஸ்அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் | கோப்புப்படம்

உதய்பூர்

அரசியல் கட்சித் தலைவர்களை சங்பரிவார அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்துப் பேசுவது என்பது நிர்வாகத்தில் தலையிடுவதாக அர்த்தமில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''ஆட்சி அதிகாரத்தில், நிர்வாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர், நிர்வாகிகள் தலையிடுகிறார்கள் எனக் கூறுவது தவறான குற்றச்சாட்டு. இது ஊடகங்களால் வெளியிடப்படும் குற்றச்சாட்டாகும். ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து, பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினால், அதற்குப் பெயர் அதிகாரத்தில் பங்கெடுப்பது என அர்த்தமில்லை.

சங் பரிவார அமைப்புகளில் இணைந்து பல்வேறு பணிகளில் கூட்டுறவாக கம்யூனிஸ்ட்கள் கூட ஈடுபடுகிறார்கள். சங் ஸ்வயம் சேவக்கின் நோக்கம் என்பது, நல்ல மக்களை உருவாக்கி, தேசத்தைக் கட்டமைப்பதாகும். இந்து சமூக அமைப்பால் நாட்டில் அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என சங் பரிவாரங்களை உருவாக்கிய கே.பி.ஹெட்கேவார் தெரிவித்துள்ளார்.

இந்து சித்தாந்தம் என்பது அமைதி, உண்மையை அடிப்படையாகக் கொண்டது. நாம் இந்துக்கள் இல்லை என்ற பிரச்சாரம் நாட்டையும், சமூகத்தையும் பலவீனமடையச் செய்யும் நோக்கில் உருவாக்கப்படுபவை. இந்து மக்கள்தொகை குறையும்போது பிரச்சினைகள் உருவாகும்.

இந்துத்துவாவிற்கு உதாரணம் என்பது கரோனா தொற்றுக் காலத்தில் ஆர்எஸ்எஸ், சங்பரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் சுயநலமற்ற சேவைதான். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எந்தப் புகழுக்கும் பெயருக்கும் ஆசைப்படமாட்டார்கள். இந்து என்ற வார்த்தை கடந்த 1980களில் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் அந்தச் சூழலிலும் சங் பரிவாரங்களைச் சேர்ந்தவர்கள் பணியாற்றினார்கள்.

ஆர்எஸ்எஸ் என்பது சமுதாயத்தின் நம்பகமான மற்றும் நம்பகமான நபர்களின் அமைப்பாகும், அதன் வார்த்தைகள் மற்றும் செயல்கள் வேறுபடுவதில்லை. கேரளா, மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மிகவும் துன்பப்படுகிறார்கள். சமுதாயம் துன்பப்படும்போது, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும் துன்பப்படுவார்கள். ஆனால், யாரும் அச்சப்பட்டு ஓடிவிடவில்லை.

ஆர்எஸ்எஸ், நிர்வாகிகள் அனைவரும் பாகுபாடு காட்டப்படாமல் இருக்கவும் நாங்கள் இந்துக்கள் என்றும் கற்பிக்கப்படுகிறது. ஆதலால், பாகுபாடு என்ற சூழலுக்கே இடமில்லை. இதை சங் அமைப்பில் இருப்பவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க முயல்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் ஒருங்கிணைப்பதாகும். சங் பரிவாரங்களைச் சேர்ந்தவர்கள் இதை நமக்குள் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். வெளியிலிருந்து அல்ல. தேசத்தின், சமூகத்தின், மதத்தின் நலனுக்காக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நல்ல பணிகளைச் செய்கிறார்கள்''.

இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x