Published : 18 Sep 2021 03:11 AM
Last Updated : 18 Sep 2021 03:11 AM
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா அக்டோபர் 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் குறித்து நேற்று அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி தலைமையில், உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட் டம் திருமலை அன்னமைய்யா பவனில் நடைபெற்றது.
பின்னர் சுப்பாரெட்டி கூறிய தாவது:
கரோனா 3-ம் அலை அச்சுறுத்தல் இருப்பதால் இம் முறையும் பிரம்மோற்சவ விழா வாகன சேவைகள் இன்றி, ஏகாந்த மாக கோயிலுக் குள் நடத்தப்படும். பக்தர்கள், தேவஸ்தான ஊழியர்கள், அதிகாரிகளின் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொண்டு இம்முடிவு தீர்மானிக்கப்பட்டது.
கரோனா தொற்று பரவல் தொடரும் வரை பக்தர்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கண் டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதனால்தான் தினமும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தொழில்நுட்ப பிரச்சினை காரண மாக ஆன்லைனில் சர்வ தரிசன டோக்கன் வழங்கும் திட்டம் தாமதமாகிறது.
விரைவில் இப்பிரச்சினை சீர் செய்யப்படும். அதன் பின்னர் ஆன்லைனில் சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் செய் யப்படும்.
இவ்வாறு சுப்பாரெட்டி தெரி வித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT