Published : 15 Sep 2021 10:32 AM
Last Updated : 15 Sep 2021 10:32 AM
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள சிங்கரேனி பகுதியில் 6வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தவரை என்கவுன்ட்டரில் கொல்லுங்கள் என தெலங்கானா தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
பொறுப்பான அரசுப் பதவியில் இருக்கும் அமைச்சர், சட்டத்தை கையில் எடுக்கும் விதத்தில் என்கவுன்டர் செய்ய வேண்டும் என்று பேசுவது விவதாத்துக்குள்ளாகியுள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸாரும், தண்டிக்க நீதிமன்றமும், நீதியும் இருக்கும்போது, குற்றவாளி பிடிபடுவதற்கு முன்பே என்கவுன்ட்டர் செய்ய வேண்டும் என அமைச்சர் மல்லா ரெட்டி பேசியது சமூக வலைத்தளத்தில் விவாதப்பொருளாகியுள்ளது.
ஹைதராபாத்தில் சயாத்பாத் பகுதியில் உள்ள சிங்கரேனி காலனியில் 6வயது சிறுமி கடந்த 9ம்தேதி முதல் காணவில்லை. அதன்பின் மறுநாள் அந்த சிறுமியின் உடல் பக்கத்துவீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்கு பின் பக்கத்து வீட்டுக்காரர் பல்லகொண்ட ராஜு தலைமறைவாகினார்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள பல்லகொண்ட ராஜூவை பிடிக்க ஹைதராபாத் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர், அவர் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதியும் அளி்க்கப்படும் என போலீஸார் அறிவி்த்துள்ளனர்.
சிறுமி கொலை குறித்து தெலங்கானா தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி நேற்று அளித்த பேட்டியில் “ சிறுமி பலாத்காரக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளி சிக்கினால், அவரை என்கவுன்ட்டரில் கொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு ஆதரவாக இருக்கும், சிறுமிைய இழந்த குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கிறோம், தேவையான உதவிகளை அரசு வழங்கும்” எனத் தெரிவித்தார்.
ஹைதராபாத் கிழக்கு மண்டல போலீஸ் ஆணையர் ரமேஷ் கூறுகையில் “ சிறுமி காணாமல் போனது குறித்த புகார் கிடைத்தவுடனே தேடத் தொடங்கினோம். சிறப்பு படையும் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
ஆனால் அந்த சிறுமி குறித்த தகவல் ஏதுமில்லை. ஆனால், சிறுமி காணமாமல் போன மறுநாள் பக்கத்து வீட்டிலிருந்து சடலமாக சிறுமி மீட்கப்பட்டார். அந்த வீட்டின் உரிமையாளர் மல்லகொண்ட ராஜூ தப்பிவிட்டார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த தகவல் அளிப்போருக்கு ரூ.10 லட்சம் வெகுமதியும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவி்த்தார்.
மகேஷ் பாபு வேதனை
தெலங்கு நடிகர் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ இந்த சமூகம் எவ்வாறு மோசமாக இருக்கிறது என்பதற்கு சிங்கனேரி காலனியில் 6வயது சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவூட்டுகிறது. நம்முடைய மகள்கள் பாதுகாப்பாக இருப்பார்களா என்பது எப்போதும் எழும்கேள்வியாக இருக்கிறது. உண்மையில் என்மனது உடைந்துவிட்டது. அந்த சிறுமியின் குடும்பத்தார் எவ்வாறு இருப்பார்கள் என்பதை கற்பனைசெய்துகூட பார்க்க முடியாது” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT