Published : 14 Sep 2021 05:30 PM
Last Updated : 14 Sep 2021 05:30 PM
நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக சன்சத் என்ற புதிய தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதனை
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் நாளை தொடங்கி வைக்கின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில், லோக்சபா தொலைக்காட்சி, ராஜ்யசபா தொலைக்காட்சி ஆகிய இரண்டையும் இணைக்க முடிவெடுக்கப்பட்டு, சன்சத் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அலுவலர் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.
சன்சத் தொலைக்காட்சியில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள், ஆளுகை மற்றும் திட்டங்கள்/ கொள்கைகளின் அமலாக்கம், இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் சம காலத்திற்கு உரிய விஷயங்கள்/ நலன்கள்/ பிரச்சினைகள் ஆகிய முக்கியமான நான்கு பிரிவுகளில் நிகழ்ச்சிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு இந்தத் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்படுகிறது. குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான எம். வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் நாளை மாலை நாடாளுமன்ற வளாகத்தின் பிரதான கூட்ட அரங்கில் சன்சத் தொலைக்காட்சியைத் தொடங்கி வைக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment