Published : 11 Sep 2021 08:45 AM
Last Updated : 11 Sep 2021 08:45 AM

‘‘நான் ஒரு காஷ்மீர் பண்டிட்’’- ஜம்முவில் ராகுல் காந்தி பேச்சு: பாஜக கடும் விமர்சனம்

ஜம்மு

ஜம்மு -காஷ்மீர் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அங்கு பேசியபோது, நான் ஒரு காஷ்மீர் பண்டிட் எனக் கூறினார். இதனை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது பிரிவு 2019 ரத்து செய்யப்பட்ட பின்னர், ஜம்மு -காஷ்மீருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரண்டாவது முறையாக பயணம் மேற்கொண்டார்.

ஜம்முவுக்கு இரண்டு நாள் பயணமாக வந்த அவர் வியாழக்கிழமை கட்ராவிலிருந்து வைஷ்ணோ தேவி சன்னதிக்கு யாத்திரையாகச் சென்றார்.

யாத்திரிகர்களுடன் 14 கிமீ தூரத்திற்கு பக்தர்களுடன் சேர்ந்து ராகுல்காந்தி பாதயாத்திரையாக நடந்து சென்றார். அவருன் காங்கிரஸ் கட்சியினர் கட்சி கொடிகளை ஏந்தி பாதையில் அணிவகுத்து நின்றனர்.

பின்னர் ஜம்முவில் நடந்த கூட்டத்தில் அவர் பங்கேற்றார். மேடையில் இருந்தவாறு 'ஜெய் மாதா தி' என்று கோஷமிட்டு அழைத்தார். மக்களை காஷ்மீர் பண்டிட் பரம்பரையை அழைத்தார்.

காங்கிரஸ் தொண்டர்களிடம் இந்து கோஷத்தை திரும்ப சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:

"நான் வைஷ்ணவி தேவியிடம் பிரார்த்தனை செய்ய இங்கு வந்துள்ளேன். நான் இங்கு எந்த அரசியல் கருத்துக்களையும் கூற விரும்பவில்லை. நான் ஒரு காஷ்மீர் பண்டிட். என் குடும்பம் காஷ்மீர் பண்டிட். காஷ்மீர் பண்டிதர்களின் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்தனர், காங்கிரஸ் அவர்களுக்காக பல நலத்திட்டங்களை அமல்படுத்தியது, ஆனால் பாஜக ஒன்றும் செய்யவில்லை. நான் அவர்களுக்காக ஏதாவது செய்வேன் என்று நான் உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். இதனை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இதற்கு ஜம்மு -காஷ்மீர் பாஜக தரப்பில் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

"காஷ்மீர் பண்டிதர்களின் துயரங்கள் காங்கிரஸ் மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளின் 'திருப்தி அரசியல்' என்பதை ராகுல் காந்தி மிகவும் வசதியாக மறந்துவிட்டார். காங்கிரஸ் தனது வாக்குக்காக வங்கி அரசியல் காஷ்மீர் பண்டிதர்களை மட்டுமல்ல, காஷ்மீரின் வளர்ச்சியையும் தியாகம் செய்தது.

ஜம்மு -காஷ்மீரின் பிரச்சினைகள் நேரு குடும்பத்தால் ஏற்பட்டது, காஷ்மீர் பிரச்சனைகளுக்கு ஜவாஹர்லால் நேரு தான் காரணம். ராகுல் காந்தியின் செயல்பாடு முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு கூறியுள்ளது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x