Published : 02 Feb 2016 04:39 PM
Last Updated : 02 Feb 2016 04:39 PM
ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மறு சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், இந்த வழக்கை 5 நீதிபதி கள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 (இயற்கைக்கு மாறான பாலுறவு)-ன் படி, ஓரினச் சேர்க்கை யில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்று டெல்லி உயர் நீதி மன்றம் 2009-ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது. சட்டப் பிரிவு 377-ன் படி ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்தான் என்று கடந்த 2013 டிசம்பர் 11-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேல் முறையீட்டு மனு மற்றும் சீராய்வு மனுக்களையும் உச்ச நீதி மன்றம் 2014-ல் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், நாஸ் பவுண் டேஷன் உள்ளிட்ட தொண்டு நிறு வனங்கள் மற்றும் ஓரினச் சேர்க்கை யாளர் அமைப்பு சார்பில் 8 மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. மறு சீராய்வு மனுக்கள் வழக்கமாக நீதிபதி அறையில்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படும். சில மனுக்கள் நீதிமன்றத்தில் வெளிப்படையாக விசாரிக்கப்படும். ஓரினச் சேர்க்கையாளர் சார்பில் தொடரப்பட்ட மனுக்கள் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், அனில் தவே, ஜே.எஸ்.கேஹர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்கள் சார்பில் கபில் சிபல் வாதிடும்போது, ‘18 வயது பூர்த்தி யடைந்தவர்கள் தங்கள் அறைக்குள் விருப்பத்தின்பேரில், பாலுறவில் ஈடுபடுவதை தண்டனைக்குரிய குற்றமாக கருதுவது சட்ட விரோத மானது’ என்று வாதிட்டார். காலனிய ஆதிக்க சட்டமான பிரிவு 377-ஐ ரத்து செய்ய வேண்டும். இச் சட்டத்தை அங்கீகரித்துள்ளதன் மூலம், ஓரினச் சேர்க்கையாளர்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட் டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்றம் 2012-ம் ஆண்டு தீர்ப்பை ஒத்தி வைத்து 21 மாதங்களுக்குப் பின்னர் தீர்ப்பளித்தது. இடையில், சட்ட திருத்தங்கள் உள்ளிட்ட நிறைய மாற் றங்கள் நடந்துள்ளன. அவற்றை நீதி மன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்றும் வாதிடப்பட்டது.
இதையடுத்து, மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘இம்மனுக்களில் அரசியல் சாசன அடிப்படை உரிமை சம்பந்தப்பட்டுள்ளதால், அதுகுறித்து விரிவாக விசாரிக்க வேண்டியதுள்ளது. எனவே, 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இம்மனுக்களை விசாரிக்கும்’ என்று உத்தரவு பிறப்பித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT