Published : 18 Feb 2016 03:59 PM
Last Updated : 18 Feb 2016 03:59 PM

கண்ணய்யா குமார் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரணை

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணை நடைபெறுகிறது.

இந்த மனு நாளை காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

கண்ணய்யா குமார் சார்பில் அவரது வழக்கறிஞர் குமார் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், "கண்ணய்யா குமார் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது கண்ணய்யா தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.

இதன் காரணமாக அவர் விசாரணை நீதிமன்றத்திலேயே ஜாமீன் மனு தாக்கல் செய்ய அச்சப்படுகிறார். எனவே, கண்ணய்யா குமார் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார்" எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 9-ம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது தேசவிரோத கோஷங்களை எழுப்பியதாக கண்ணய்யா குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x