Published : 20 Feb 2016 08:27 AM
Last Updated : 20 Feb 2016 08:27 AM
செம்மரம் வெட்டும் தமிழக கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் வரை வழங்க கடத்தல் காரர்கள் ஆசை காண்பித்துள்ளனர். இதனால் இதில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என ஆந்திர சிறை அதிகாரி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
திருப்பதி சேஷாசலம் வனப் பகுதி 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பரவி உள்ளது. அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங் கள், அரசு அதிகாரிகள் ஆகியோரின் பக்க பலத்தால் வனப்பகுதியில் உள்ள செம்மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 22 லட்சம் செம்மரங்கள் வெட்டப் பட்டுள்ளன. இதில் வெறும் 7 லட்சம் செம்மரங்களை மட்டுமே வனத்துறையினர் பறிமுதல் செய் துள்ளனர். ரூ. 25,000 கோடி மதிப் புள்ள செம்மரங்கள் வெளிநாடு களுக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
செம்மரங்களை வெட்டுவதற்கு தமிழகத்தின் வேலூர், திருவண்ணா மலை, விழுப்புரம், சேலம், ஈரோடு போன்ற பகுதிகளில் உள்ள பழங்குடி இன கூலி தொழிலாளர் கள் அழைத்து வரப்படுகின்றனர். உயிரிழந்தாலும் அவர்களது குடும் பத்தினருக்கு ரூ.5 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்குவதாக கடத்தல்காரர்கள் பண ஆசை காட்டுகின்றனர்.
மேலும் மரம் வெட்டுவதற்கு முன்பணமாக ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கி விடுகின்ற னர். இதனால், உயிரையும் பொருட்படுத்தாமல் செம்மரங் களை வெட்டுவதற்கு ஏராளமான கூலித் தொழிலாளர்கள் முன் வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து திருப்பதி சிறைச் சாலை அதிகாரி வேணுகோபால் கூறும்போது, ‘‘கடந்த 2015-ம் ஆண்டு மட்டும் 578 பேர் கைது செய் யப்பட்டனர். அவர்களில் 332 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். எஞ்சி யவர்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லியை சேர்ந்தவர்கள்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பல முறை அறிவுரை வழங்கிவிட்டோம். எனினும் அவர்கள் திருந்தாமல் தொடர்ந்து செம்மரம் வெட்டும் தொழிலுக்கு வந்துவிடுகின்றனர். உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்குவதாக கடத்தல்காரர்கள் ஆசை காண்பித்திருப்பது அவர் களிடம் விசாரித்ததில் தெரிய வந்துள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT