Published : 18 Feb 2016 09:46 AM
Last Updated : 18 Feb 2016 09:46 AM

45 ஏக்கரில் ஆந்திர தலைமைச் செயலகம்: அடிக்கல் நாட்டினார் முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்தின் புதிய தலை நகரான அமராவதியில், 45 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள புதிய தலைமை செயலகத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அடிக்கல் நாட்டினார்.

குண்டூர் மாவட்டம், தூளூர் மண்டலம், வெலக புடி கிராமத் தில் நடந்த இவ்விழாவில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

தலைநகருக்காக நிலம் வேண்டி வேண்டுகோள் விடுத்த தும், இங்குள்ள விவசாய பெரு மக்கள் தாமாக முன்வந்து 33 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசுக்கு வழங்கி உள்ளனர். இவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன். ஹைதரா பாதில் இருந்து கொண்டு ஆட்சியை நடத்த இயலாது என்ப தால் இங்கு புதிய தலைமை செயலகம் கட்ட முடிவு செய்யப் பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக் கப்பட்டு அலுவலகம் செயல்படத் தொடங்கும்.

ஆந்திர மாநிலத்தை கூறு போட்டவர்கள் ஆச்சர்யப்படும் வகையில் அமராவதி நகரம் உருவாகும். மாநிலப் பிரிவினை யால் நமக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக நினைக்காமல் அனை வரும் உத்வேகத்தோடு முன்னேற வேண்டும். தலைநகரம் உருவாக இருப்பதால், விஜயவாடாவில் வீட்டு வாடகை பன்மடங்கு உயர்ந்து விட்டதாக புகார்கள் வந்துள்ளன. எனவே, தயவு செய்து வீட்டு உரிமையாளர்கள் வாடகையை உயர்த்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

ஜாதி, மத, கட்சி பேதத்தை வைத்து சிலர் அரசியல் நடத்த முயற்சிப்பது கவலை அளிக் கிறது. அனைத்து மாவட்டங்களும் சமமான வளர்ச்சி அடையும் வகையில் பணி புரிவதே எனது லட்சியம். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

இவ்விழாவில், சட்டப்பேரவை சபாநாயகர் கோடல சிவப்பிரசாத், மேலவைத் தலைவர் சக்ரபாணி, துணை முதல்வர் சின்ன ராஜப்பா, மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x