Published : 28 Aug 2021 09:30 AM
Last Updated : 28 Aug 2021 09:30 AM
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ஆகியோர் சுகாதார ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இன்றைய நாளில் தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை. ஒரே நாளில் 1 கோடிக்கும் அதிகமானோருக்குக் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் பாராட்டுகள் என்று பதிவிட்டுள்ளார்.
Record vaccination numbers today!
Crossing 1 crore is a momentous feat. Kudos to those getting vaccinated and those making the vaccination drive a success.
கோவின் இணையதளத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) 1,02,06,475 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாகத் தகவல் பதிவாகியுள்ளதை அடுத்து பிரதமர் இந்தப் பாராட்டைப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தனது ட்விட்டர் பக்கத்தில், சுகாதார ஊழியர்களின் கடுமையான உழைப்புக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் இலவச தடுப்பூசித் திட்டத்துக்கும் நல்ல பலன் கிடைத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
सबका साथ
सबका विकास
सबका विश्वास
सबका प्रयास
यह वही प्रयास है जिससे देश ने 1 दिन में 1 करोड़ से अधिक टीके लगाने का आँकड़ा पार कर लिया है। स्वास्थ्यकर्मियों का अथक परिश्रम व PM @NarendraModi जी का #SabkoVaccineMuftVaccine का दृढ़ संकल्प रंग ला रहा है। pic.twitter.com/hHlUU4q3fv— Mansukh Mandaviya (@mansukhmandviya) August 27, 2021
;
இதுவரை ஒரே நாளில் செலுத்தப்பட்ட அதிகபட்ச தடுப்பூசி எண்ணிக்கை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கரோனா தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை 61 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 50% மக்களுக்கு முதல்டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT