Published : 24 Feb 2016 08:59 AM
Last Updated : 24 Feb 2016 08:59 AM
தொலை தூர அரசு பஸ்களில் பின் இருக்கைகளுக்கான முன்பதிவு கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி வழங்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. இது விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அரசு போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குநர் சாம்பசிவ ராவ் விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
அரசு பஸ்களில் 250 கி.மீட்ட ருக்கும் மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணி களின் வசதிக்காக சில சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கடைசி இரு வரிசைகளில் (9 இருக்கைகள்) பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப் படும். டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், கருடா, கருடா பிளஸ், அமராவதி ஆகிய சொகுசு பஸ்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.
மேலும் தொலைதூர பஸ் களில் பயணிப்பதற்காக முன் பதிவு செய்த பயணிகள், பஸ் புறப்படுவதற்கு 2 மணி நேரத் துக்கு முன்பாக குறிப்பிட்ட பஸ் நிலையத்துக்கு உள்ளூர் மற்றும் கிராம பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும்.
பஸ் நிறுத்தங்களுக்கு வரும் பஸ்களின் நேரத்தை ‘ரிங் டோன் அலர்ட்’ முறை மூலமாக தெரிவிக்கும் வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளோம். இத் திட்டம் ஏற்கெனவே சோதனை முறையில் 13 பஸ் நிறுத்தங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளின் நலனுக் காக பஸ் நிறுத்தங்களில் மருந்து கடைகள் திறக்கப்படும். பஸ் நிறுத்தங்களை அழகுபடுத்த 5 ஆண்டுகள் வரை தனி யாருக்கு வாடகைக்கு விடவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன்படி அவர்கள் கடைகளை யும் நடத்தி கொள்ளலாம். இவ்வாறு சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT