Published : 21 Aug 2021 11:00 PM
Last Updated : 21 Aug 2021 11:00 PM
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு அழியா பங்களிப்பு செய்தவர் கல்யாண் சிங் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங் மறைந்தார். அவருக்கு வயது 89.
கடந்த ஜூலை மாதம் அவருக்கு உடல்நிலைக் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஜூலை 4ஆம் தேதி முதல் அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரகக் கோளாறு, இதயக்கோளாறு, நரம்பியல் பிரச்சினை இருந்தது. இதனால் அவருக்கு பல்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். செப்சிஸ் மற்றும் பல்வேறு உள் உறுப்பு செயலிழப்பால் அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வருந்துகிறேன். கல்யாண் சிங் அவர்கள் சிறந்த தலைவர், மூத்த நிர்வாகி, அடிமட்ட மக்களுக்கான தலைவர், தலைசிறந்த மனிதர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு அழியா பங்களிப்பு செய்தவர். அவருடைய மகன் ராஜ்வீர் சிங்கிடம் பேசி எனது இரங்கலைப் பதிவு செய்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
I am saddened beyond words. Kalyan Singh Ji…statesman, veteran administrator, grassroots level leader and great human. He leaves behind an indelible contribution towards the development of Uttar Pradesh. Spoke to his son Shri Rajveer Singh and expressed condolences. Om Shanti. pic.twitter.com/ANOU2AJIpS
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT