Published : 20 Aug 2021 02:18 PM
Last Updated : 20 Aug 2021 02:18 PM

புதிய இந்தியாவின் வலுவான தூணாக உருவாகிறது ராமர் கோயில்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி

புதிய இந்தியாவின் வலுவான தூணாக ராமர் கோயில் உருவாக்கப்பட்டு வருகிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் சோம்நாத்தில் ரூ 3.5 கோடி மொத்த மதிப்பீட்டில் ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையால் பழைய (ஜுனா) சோம்நாத் கோயில் வளாகம் புனரமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிக இடவசதியுடன் மொத்த பழைய கோயில் வளாகமும் புனரமைக்கப்பட்டுள்ளது.

ரூ 30 கோடி மதிப்பீட்டில் ஸ்ரீ சிவ பார்வதி கோயில் கட்டப்படவுள்ளது. ஆன்மிக மற்றும் பாரம்பரிய தலங்களுக்கு புத்தாக்கம் அளிப்பதற்கான பிரசாத் திட்டத்தின் கீழ் ரூ 47 கோடி மொத்த மதிப்பீட்டில் சோம்நாத் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:

நமது நாட்டில் ஆன்மீக சுற்றுலாவை நாம் வலுப்படுத்த வேண்டும். இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கும். அதுமட்டுமின்றி இளைஞர்கள் நமது கடந்த காலத்தைப் பற்றிய அறிவைப் பெறுவார்கள். நம்பிக்கையை பயத்திலிருந்து ஒடுக்க முடியாது. கடந்த காலத்திலிருந்து நாம் இதனைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நான் பாரத் ஜோடோ அந்தோலன் (இந்தியாவின் ஒருங்கிணைப்பு இயக்கம்) பற்றி பேசும்போது, அது வெறும் புவியியல் மற்றும் கருத்தியல் தொடர்பு பற்றியது அல்ல. ஆனால் நமது வரலாற்றின் பாரம்பரியத்துடன் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிமொழி எனக் கூறினேன். நமது புதிய இந்தியாவின் வலுவான தூணாக ராமர் கோயில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x