Published : 14 Feb 2016 11:57 AM
Last Updated : 14 Feb 2016 11:57 AM

காதலியை கொன்று வீட்டில் புதைத்த காதலன்

ஆந்திராவில் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திய காதலியை, காதலன் கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட் டம், குர்ரம் கொண்டா மண்டலம், கங்கிரெட்டிகாரி பல்லி கிராமத்தை சேர்ந்தவர் வேமநாராயணா (30). இவரும், வாயல்பாடு பகுதியை சேர்ந்த சபியா எனும் முஸ்லிம் பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்துக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் பெற்றோருக்கு தெரியாமல் சபியாவுடன் பழகுவதற்காக திருப்பதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அவரை வேலைக்கு சேர்த்துள்ளார். கடந்த 28-ம் தேதி வேலைக்கு சென்ற சபியா வீடு திரும்பவில்லை. பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக இது குறித்து போலீஸில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் காதலி சபியாவை வேமநாராயணா கொலை செய்து, சடலத்தை அவரது வீட்டிலேயே புதைத்து வைத்த திடுக்கிடும் தகவல் அம்பலமானது. இதையடுத்து அவரது வீட்டில் புதைக்கப்பட்ட சபியாவின் சடலத்தை போலீஸார் நேற்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், உருகி காதலித்த காதலியை, காதலனே கொலை செய்து வீட்டில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x