Published : 18 Aug 2021 03:13 AM
Last Updated : 18 Aug 2021 03:13 AM
ஆப்கானிஸ்தானில் இருந்து 150 இந் தியர்கள் பத்திரமாக நேற்று நாடு திரும்பினர். மீதமுள்ள இந்தியர்களையும் மீட்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. இதனி டையே அந்நாட்டின் சிறுபான்மையின ரான இந்துக்கள், சீக்கியர்களை மீட்க புதிய விசா பிரிவை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில், அந்த நாடு முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையம் மட்டும் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
தலிபான்களுக்கு அஞ்சி ஆப் கானிஸ்தானைச் சேர்ந்த ஆயிரக்கணக் கானோர் காபூல் விமான நிலைய வளாகத்துக்குள் அகதிகளாக தஞ்ச மடைந்துள்ளனர். கூட்டத்தை கட்டுப் படுத்த அமெரிக்க படைகள் நேற்று முன்தினம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். நடுவானில் பறந்த விமானத்தில் இருந்து 3 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர். இதன்காரணமாக விமான போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. அமெரிக்க வீரர்களின் முயற்சியால் காபூல் விமான நிலையத்தில் நேற்று மக்கள் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
இந்தியர்களை மீட்க நடவடிக்கை
காபூலில் இருந்து கடந்த 15-ம் தேதி சுமார் 200 இந்தியர்களும், 16-ம் தேதி 45 இந்தியர்களும் விமானத்தில் இந் தியா அழைத்து வரப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக இந்திய விமான படை யின் சி-17 குளோப் மாஸ்டர் விமானம் மூலம் 150 இந்தியர்கள் காபூலில் இருந்து நேற்று குஜராத்தின் ஜாம் நகருக்கு அழைத்து வரப்பட்டனர். அங் கிருந்து டெல்லிக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானுக் கான இந்திய தூதர் ருத்ரேந்திர தாண்டனும் இந்தியா திரும்பினார்.
ஏராளமான இந்திய தொழிலாளர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்பது தொடர் பாக பிரதமர் நரேந்திர மோடி தலை மையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியர்களை மீட்பது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அந்தோணி பிளிங்டனுடன், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
காபூலில் அறிவிக்கப்படாத ஊரடங்கை தலிபான்கள் அமல்படுத்தி யுள்ளதால் அந்த நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. எனினும் அனைத்து இந்தியர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் சரக்கு விமானம் நேற்று கத்தார் புறப்பட்டது. இதில் அமெரிக்க தூதரக ஊழியர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. விமானம் புறப்பட்ட போது நூற்றுக்கணக்கான மக்கள் விமானத்தை பின்தொடர்ந்து ஓடினர். அவர்களின் மீது பரிதாபப்பட்ட அமெ ரிக்க அதிகாரிகள், அவர்களையும் விமானத்தில் ஏற்றினர். சி17 ரக விமானத்தில் 150 வீரர்கள் மட்டுமே செல்ல முடியும் என்ற போதிலும் 640 அகதிகள் விமானத்தில் நெருக்கமாக அமர்ந்து பயணம் செய்தனர்.
பதற்றத்தை தணிக்க தலிபான் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கை யில், "ஆப்கானிஸ்தானில் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பொதுமன் னிப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் சேனல்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன.
அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், துணை அதிபர் அமருல்லா சேலா நேற்று தன்னை பொறுப்பு அதிபராக அறிவித்துள்ளார். இதனால் புதிய குழப்பம் எழுந்திருக்கிறது.
புதிய விசா
இதனிடையே ஆப்கானிஸ்தானில் மத சிறுபான்மையினர்களாக இருக் கும் இந்துக்களும் சீக்கியர்களும் இந் தியாவுக்கு எளிதில் வருவதற்கு ஏது வாக 'இ – எமர்ஜென்ஸி எக்ஸ் மிசேலே னியஸ்' என்ற புதிய விசா பிரிவை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்தாலே போது மானது. முதல்கட்டமாக, 6 மாதகாலத் துக்கு இந்த விசா செல்லுபடியாகும். இந்திய தூதரகம் மூடப்பட்டுள்ளதால், இந்த விசாவுக்கான விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி செய்யும் பணிகள் டெல்லியில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT