Published : 10 Jun 2014 09:44 AM
Last Updated : 10 Jun 2014 09:44 AM

மாநிலங்களவைக்கு பிஹாரில் சரத் யாதவ் உள்பட 3 பேர் போட்டி: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சார்பில் போட்டி வேட்பாளர்களும் மனு

பிஹாரில் நடைபெறவுள்ள மாநிலங்களவைக்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சரத்யாதவ் உட்பட மூன்று பேர் போட்டியிடுகின்றனர். இவர்களை எதிர்த்து அக்கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், இரண்டு போட்டி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.

மாநிலங்களவையில் பிஹாருக் கான மூன்று உறுப்பினர்கள் பதவியிடத்துக்கான இடைத்தேர் தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு திங்கள்கிழமை கடைசி நாளாக இருந்தது.

முன்னதாக ஆளும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் யாரும் போட்டியிடப்போவதில்லை என நிதிஷ்குமார் அறிவித்திருந்தார். ஆனால், கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு திடீரென அக் கட்சியின் தலைவர் சரத் யாதவுடன் பேச்சு நடத்தி, வேட்பாளர்களை அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து சரத்யாதவ், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் குலாம் ரசூல் பால்யாவி, நிதிஷ்குமாரின் முன்னாள் ஆலோசகர் பவன்குமார் வர்மா ஆகியோர் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சரத்யாதவ், மக்களவைத் தேர்தலில் மாதேபுரா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

சரத் யாதவ் தவிர்த்த, மற்ற இரண்டு வேட்பாளர்கள் மீது கட்சி எம்.எல்.ஏ.க்களிடையே அதிருப்தி நிலவுகிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவில் சபீர் அலி மற்றும் அணில் சிங் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரான சபீர் அலி, தனக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால், கட்சியை விட்டு வெளியேறினார். அதன் பிறகு, பாஜகவில் இணைந்த சில மணி நேரங்களில் அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கிளம்பிய புகாரினால் அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அணில்சிங் மக்களவைத்தேர்தலில் போட்டி யிட்டு தோல்வியடைந்தவர்.

போட்டி வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளதால், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தர்மசங்கட

மான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் படுதோல்விக்கு பொறுப்பேற்ற நிதிஷ் குமார், தனக்குப் பதிலாக ஜிதன்ராம் மாஞ்சியை புதிய முதல்வராக் கினார். புதிய அமைச்சரவை பதவியேற்றபோது அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள், ஏற் கெனவே உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் இணைந்து, தற்போது செயல்படத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஹார் சட்டமன்றத்தில் மொத்தம் 237 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில், ஐக்கிய ஜனதா தளம் - 117, பாஜக - 89, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 20, காங்கிரஸ் - 4, சிபிஐ - 1 மற்றும் 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x