Published : 14 Aug 2021 11:37 AM
Last Updated : 14 Aug 2021 11:37 AM
கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது நிகழ்ந்த வன்முறையால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 14- ம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது. மக்களைப் பற்றி கவலைப்படாத வெறுப்பு மற்றும் வன்முறையால் பல லட்சக்கணக்கான எங்கள் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இடம்பெயர்ந்தனர், தங்கள் உயிரிழந்தனர்.
நமது மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14- ம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக அனுசரிக்கப்படும்.
சமூகப் பிளவுகள், ஒற்றுமையின்மை என்ற விஷத்தை அகற்றி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் மனித வலுவூட்டலின் உணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசப் பிரிவினையின் நினைவு தினம் நமக்கு நினைவூட்டட்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT