Published : 12 Aug 2021 07:07 PM
Last Updated : 12 Aug 2021 07:07 PM
அகில இந்திய யானை மற்றும் புலிகளின் எண்ணிக்கை மதிப்பீட்டிற்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ள அகில இந்திய யானை மற்றும் புலிகளின் எண்ணிக்கை மதிப்பீட்டின்போது பின்பற்றப்பட வேண்டிய மதிப்பீட்டு நெறிமுறைகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் புபேந்தர் யாதவ் இன்று வெளியிட்டார். உலக யானை தினத்தை முன்னிட்டு யானைகள் மற்றும் புலிகளின் எண்ணிக்கை மதிப்பீட்டை அமைச்சகம் முதன்முறையாக இணைத்து, அதற்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், யானைகளை பாதுகாப்பதில் உள்ளூர் மக்களின் பங்களிப்பை வலியுறுத்தியதோடு மனிதர்கள்- யானைகளுக்கு இடையேயான பிரச்சினைகளை குறைக்கும் வகையிலான அணுகுமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, யானைகளைப் பாதுகாப்பதன் மூலம் காடுகள் பாதுகாக்கப்படுவதாகவும், காடுகள் பாதுகாக்கப்பட்டால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்றும் கூறினார். இயற்கை மற்றும் வன விலங்குகளுடன் இணைந்த வாழ்வை முன்னெடுத்துச் செல்லுமாறு அனைவரையும், குறிப்பாக இளைஞர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
அமைச்சகத்தின் யானைகள் பிரிவின் காலாண்டு செய்தி மடலான “ட்ரம்பெட்டின்” நான்காவது பதிப்பு, நிகழ்ச்சியின்போது வெளியிடப்பட்டது. விடுதலையின் அம்ருத் மஹோத்சவம் பற்றிய ஒரு வாரகால நிகழ்ச்சியை நடத்துவதற்கு பல்வேறு அமைப்புகளுடன் அமைச்சகம் இணைந்துள்ளது. இணையதளம் வாயிலாக நடத்தப்பட்ட ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகளின் வெற்றியாளர்களையும் அமைச்சர்கள் அறிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT