Published : 12 Aug 2021 03:20 AM
Last Updated : 12 Aug 2021 03:20 AM
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாத நிலை உருவானால், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இப்புதிய விதிமுறை அக்டோபர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கிசமீபத்தில் வெளியிட்ட விதிமுறைகளில் தெரிவித்துள்ளது.
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாத நிலை உருவாவதால் வாடிக்கையாளருக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க இத்தகைய அபராதத்தை வங்கிகளுக்கு விதிப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறையால் வங்கிகள் ஏடிஎம் இயந்திரத்தில் எப்போதும் போதியபணத்தை நிரப்பி வைக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் பணத்தைஎடுக்க எப்போதும் போதிய அளவிலான பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் வங்கிகள் நிரப்பி வைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். ஏடிஎம் இயந்திரத்தில் பணம்இல்லாத நிலையை முற்றிலுமாகதவிர்க்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஒரு மாதத்தில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக பணம் இல்லாத நிலை உருவானால் ரூ.10 ஆயிரம்அபராதம் விதிக்கப்படும். வங்கிகளுக்காக ஏடிஎம்களை நிர்வகிக்கும் பிற நிறுவனங்களின் (வெள்ளை லேபிள் ஏடிஎம்) ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லாத சூழல் உருவானாலும் எந்தவங்கிக்காக அந்த ஏடிஎம் செயல்படுத்தப்படுகிறதோ அந்த வங்கியிடம் அபராதம் வசூலிக்கப்படும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இந்த அபராதத் தொகையை அந்நிறுவனத்திடம் இருந்து வங்கிகள் பின்னர் வசூலித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT