Published : 10 Aug 2021 03:15 AM
Last Updated : 10 Aug 2021 03:15 AM
சுதந்திர தின விழாவுக்கு முன்னதாக காஷ்மீரில் தீவிரவாதிகள் மேற் கொள்ளவிருந்த சதிச்செயல் முறியடிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஏராளமான ஆயுதங்களை இறக்கி தீவிரவாதிகள் சதிச்செயலில்ஈடுபட இருப்பதாக ராணுவத்தின ருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து உள்ளூர் போலீஸார், எல்லைப் பாதுகாப்புப் படை போலீஸார், ராணுவ வீரர்கள் அந்த இடத்துக்கு நேற்று விரைந்து சென்றனர்.
அங்கு ஏ.கே.47 ரக துப்பாக்கி கள், கையெறி குண்டுகள், டெட்டனேட்டர்கள், ஆயுதங்கள், வெடிகுண்டுகள், துப்பாக்கிக் குண்டுகள், பிஸ்டல்கள் ஆகிய வற்றை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த2 தீவிரவாதிகளையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களது பெயர் யாசிர் ஹுசைன், உஸ்மான் காதிர் என்பது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஜம்மு, சம்பா, ரஜவுரி, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்துக்கு இடமானவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “பிஎஸ்எஃப், ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு, சிறப்பு செயல்பாட்டு பிரிவு (எஸ்ஓஜி) ஆகிய பிரிவினர் இணைந்து எல்லைக் கோட்டுப் பகுதிக்கு (எல்ஓசி) அருகிலுள்ள பூஞ்ச் மாவட்டம் மான்கோட் அருகிலுள் சங்கட் கிராமத்தில் சோதனை நடத்தினர். அப்போது சங்கட் கிராமத்தில் ஏராளமான ஆயுதங்கள் கிடைத்தன. தீவிரவாதிகள் மிகப்பெரிய சதிச் செயலில் ஈடுபட திட்டமிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது பாதுகாப்புப் படையினர் இதை முறியடித் துள்ளனர். இதையடுத்து இப்பகுதியில் கண்காணிப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது” என்று தெரி வித்தார். - பிடிஐ
பாஜக நிர்வாகி, மனைவி சுட்டுக்கொலை
காஷ்மீரில் குல்காம் மாவட்ட பாஜக விவசாயிகள் அணித் தலைவராக இருந்தவர் குலாம் ரசூல் தார். அப்பகுதி கிராமப் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்தார். இவரும் இவரது மனைவியும் நேற்று அனந்தநாக் நகரின் லால் சவுக் பகுதியில் தீவிரவாதிகளால் சுட்டப்பட்டு உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.
இந்த தாக்குதலுக்கு சில மணி நேரம் முன்பு காஷ்மீர் பள்ளத்தாக்கின் பூஞ்ச் மாவட்டத்தில் 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள், இதற்கான 4 சுற்று தோட்டாக்கள், ஒரு சீன கைத்துப்பாக்கி, இதற்கான தோட்டாக்கள், 4 சீன கையெறி குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை கைப்பற்றப்பட்டதாக பிஎஸ்எப் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா, மாநில பாஜக தலைவர் அல்டாஃப் தாக்கூர் அகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT