Last Updated : 09 Aug, 2021 10:03 AM

3  

Published : 09 Aug 2021 10:03 AM
Last Updated : 09 Aug 2021 10:03 AM

 சச்சின் பைலட் எதிர்காலத்தில் பாஜகவில் சேரலாம்: அப்துல்லா குட்டி சூசகம்

காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் | கோப்புப்படம்

ஜெய்பூர்


காங்கிரஸ் மூத்த தலைவரும், ராகுல்காந்திக்கு நெருக்கமானவருமான சச்சின் பைலட் எதிர்காலத்தில் பாஜகவில் சேரலாம் என்று பாஜக துணைத்தலைவர் அப்துல்லா குட்டி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அசோக் கெல்டா முதல்வராக இருந்து வருகிறார். தேர்தல் நேரத்தில் சச்சின் பைலட் செய்தபணிகள், பிரச்சாரம் ஆகியவற்றால், தேர்தலில் வென்றால் சச்சின் பைலட் முதல்வராவார் என்று பேசப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் சச்சின் பைலட்டை முதல்வராக்குவதாக ராகுல் காந்தியும் தெரிவித்திருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகின.

ஆனால், கடைசிநேரத்தில் ஏற்பட்ட குழப்பம், உள்கட்சி மோதல் ஆகியவற்றால், மூத்த தலைவர் அசோக் கெலாட் முதல்வராகினார். இதனால், சச்சின் பைலட் கடும் அதிருப்தி அடைந்தார், அவருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. இருப்பினும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையிலான கோஷ்டி பூசல், உரசல் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

ஏற்கெனவே, . மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட மோதலால் ஜோதிர்ஆத்தியா சிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சென்று பாஜகவில் இணைந்தார். இதனால் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

அதேபோன்ற நிலைமை ராஜஸ்தானிலும் ஏற்படும் சூழல் இருந்தது. இதைஅறிந்த ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சச்சின் பைலட்டை டெல்லிக்கு வரவழைத்து சந்தித்துப் பேசினர். முதல்வர் அசோக் கெலாட்டையும் அழைத்துப் பேசிய காங்கிரஸ் தலைமை இருவருக்கும் இடையிலான மோதல்போக்கை முடிவுக்கு கொண்டுவந்தது.

அந்தப் பேச்சுவாரத்தையின்போது, சச்சின் பைலட் காங்கிரஸ்தலைமை மற்றும் ராகுல் காந்தியிடம் சில கோரிக்கைகளை வைத்திருந்தார். அந்த கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக காங்கிரஸ் தலைமையும் உறுதியளித்திருந்தது. இதனால்தான் சச்சின் பைலட் சமாதானமாகி கட்சியிலிருந்து வெளியேறும் எண்ணத்தைக் கைவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தானில் தன்னுடைய கடினமான உழைப்பால்தான் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்குவந்துள்ளதால், கட்சியைவிட்டு விலகமாட்டேன் எனவும் சச்சின் பைலட் தெரிவி்த்திருந்தார்

இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிடம் தான் அளித்த கோரிக்கைகள் 2ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேற்றாதது குறித்து மிகுந்தஅதிருப்தியில் சச்சின் பைலட் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதுஅதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜெய் மகான் ஆலோசனை நடத்திவருகிறார். இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கக்கோரி பைலட் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அப்துல்லா குட்டி

இந்ந சூழலில் பாஜக துணைத் தலைவர் அப்துல்லா குட்டி ஜெய்பூரில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார் அவர் கூறுகையில் “ காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் சிறந்த தலைவர்தான். எதிர்காலத்தில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். சச்சின் பைலட் பாஜகவில்கூட சேர்வார் என்றுநான் நினைக்கிறேன்.

பாஜக முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என சிலர் அவதூறு பரப்புகிறார்கள். அது தவறானது பொய்யானது. மரியாதைக்குரிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சமீபத்தில் கூறியுள்ளதபடி இந்துக்கள், முஸ்லிம்கள் மரபணுஒன்றுதான். அனைவரையும் அரவணைத்துச் செல்வதுதான் பாஜகவின் கொள்கை” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x