Published : 09 Aug 2021 03:16 AM
Last Updated : 09 Aug 2021 03:16 AM
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் பலர், பசு சாணத்தில் இருந்து உரம், அழகிய விளக்குகள், வறட்டிகள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
முதலில் உள்ளூர் மக்கள் மட்டுமே இந்தப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வந்தனர். பின்னர், இதுபோன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை அறிந்த அண்டை மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் இவற்றை விரும்பி வாங்க தொடங்கினர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகம், வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்தி பெண்களுக்கு உதவ முடிவு செய்தது. அதன்படி, அவர்கள் தயாரிக்கும் பொருட்களை அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் விற்க மாவட்ட நிர்வாகம் சார்பில்ஏற்பாடு செய்யப்பட்டது. 4 நாட்களில் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை யாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT