Published : 08 Aug 2021 12:03 PM
Last Updated : 08 Aug 2021 12:03 PM
கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை இணைந்து பயன்படுத்துவதால், சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும், நல்ல பலன் கிடைக்கிறது என்று ஐசிஎம்ஆர் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் தற்போது இரு தடுப்பூசிகள் மக்களுக்கு அதிகமாகச் செலுத்தப்பட்டு வருகின்றன. பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் மற்றும் சீரம்நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசியாகும்.
இந்தியாவில் தற்போது 50 கோடிபேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இதில் மூன்றில் இருவருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசிதான் செலுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தடுப்பூசியைப் பொறுத்தவரை ஒருவருக்கு முதல் டோஸில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தினால், 2-வது டோஸிலும் கோவாக்சின் தடுப்பூசிதான் செலுத்த வேண்டும் என்று ஐசிஎம்ஆர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படிதான் தடுப்பூசி செலுத்த வரும் மக்களுக்கும் அவர்களுக்கு வழங்கப்படும் அட்டை, இணையதளத்தில் பதிவு செய்தல் ஆகியவற்றில் என்ன மாதிரியான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனக் குறி்ப்பிடப்படுகிறது.
இந்நிலையில் இரு வேறு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவதால், நோய்எதிர்ப்புச் சக்தி அதிகரிக்குமா என்று பல்வேறு நாடுகளிலும் ஆய்வுகள்நடந்து வருகின்றன, ஐசிஎம்ஆர்அமைப்பும் ஆய்வு நடத்தியது.
அதாவது முதல் டோஸில் ஒருவர் கோவாக்சின் தடுப்பூசியும், 2-வது டோஸில் கோவிஷீல்ட் தடுப்பூசியும் செலுத்துவதால், ஏதேனும் பக்கவிளைவுகள் வருமா, வேறு ஏதாவது உடலில் உறுப்புகளுக்குபாதிப்பு ஏற்படுமா என்று ஆய்வுகள் நடத்தப்பட்டன.
அந்தஆய்வி்ல் இரு வேறு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவதால் உடலில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரி்க்கும் என ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்துள்ளது
அதாவது, அடினோவைரஸ் அடிப்படையைக் கொண்ட கோவிஷீல்ட் தடுப்பூசியை ஒரு டோஸாகவும், செயலிழக்க வைக்கப்பட்ட வைரஸ் மூலம் தாயாரிக்கப்பட்ட கோவாக்சின் மருந்தை 2-வது டோஸாகவோ கலந்து பயன்படுத்துவதால், சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தி கிைடக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுநர்கள் குழு, கோவாக்சின், கோவிஷீல்ட் மருந்துகளை கலந்து பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வுசெய்யவும் பரிந்துரை செய்திருந்தது.
இதையடுத்து, தமிழகத்தில் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி இரு தடுப்பூசிகளையும்கலந்து பயன்படுத்துவது குறித்த ஆய்வுகளை நடத்த அனுமதிவழங்கப்பட்டது.
மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுநர்கள் குழுவினர் தரப்பில் கூறுகையில் “ இந்த ஆய்வு என்பது ஒருவர் முதல் டோஸில் கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் தடுப்பூசியும் 2-வது டோஸில் வேறு தடுப்பூசியும் செலுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்த வேலூர் சிஎம்சி கல்லூரிக்கு அனுமதியளி்க்கப்பட்டது. இதில் 300 ஆரோக்கியமான தன்னார்வலர்கள் மூலம் 4 கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் இரு தடுப்பூசிகளையும் கலந்து பரிசோதனை நடத்தப்பட்டது”எனத் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT