Published : 30 Jun 2014 09:29 AM
Last Updated : 30 Jun 2014 09:29 AM
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், நகரம் கிராமத்தில் நடந்த கெயில் நிறுவன எரிவாயு கசிவு விபத்து தொடர்பாக கெயில் நிறுவன அதிகாரிகள் இரண்டு பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கு பதிவு
எரிவாயுக் கசிவு விபத்து தொடர்பாக நகரம் கிராம வருவாய் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்தனர். முதல் கட்ட விசாரணையில் , கெயில் நிறுவனத்தின் அலட்சிய போக்கே காரணம் என தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, கெயில் நிறுவனம் மீது, 304ஏ, 286, 338, 337 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை உயர்வு
விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19- ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளை (பொது மேலாளர்கள்) தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக கெயில் நிறுவனத்தின் திட்ட அதிகாரி ஏ. கர்னாடக் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
இது குறித்து அவர் ஹைதரா பாத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: கசிவு ஏற்பட்ட எரிவாயு உடனடியாக காற்றில் கலந்துவிடும்.
ஆனால், நகரம் கிராமத்தில் மட்டும் ஏன் எரிவாயு காற்றில் கலக்காமல் அடர்த்தியாக ஒரு வளைவு போன்று பரவியது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்திற்கு காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கெயில் நிறுவனம் சார்பில், முதற்கட்ட நஷ்ட ஈடாக ரூ. 3.89 கோடி கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
உயர்நிலைக்குழு விசாரணை
மத்திய பெட்ரோலியத்துறை சார்பில் ஆர்.பி சிங் தலை மையில் உயர்நிலைக்குழு விசாரணையைத் தொடங்கியது.
இக்குழு, சம்பவ இடத்தில் பொதுமக்கள், அதிகா ரிகள், சம்பவத்தை நேரில் பார்த்த வர்கள், பாதிக்கப் பட்டவர்கள் என அனைத்து தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்த இடத்தில் மண், தண்ணீர் போன்றவற்றின் மாதிரியைச் சேகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT