Published : 07 Aug 2021 03:17 AM
Last Updated : 07 Aug 2021 03:17 AM
திருமலை அன்னமைய்யா பவனில் நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகார குழு கூட்டம் அதன் தலைவர் ஜவஹர் ரெட்டி தலைமையில் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் ஜவஹர் ரெட்டி கூறியதாவது:
திருமலையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், காற்றிலும் மாசு ஏற்படுவதை தடுக்க சோதனை அடிப்படையில் முதலில் 35 பேட்டரி கார்கள் உபயோகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வாணி அறக்கட்டளை மூலம் ஆந்திர மாநிலத்தில் நலிந்த 10 கோயில்கள் சீரமைக்கப்படும். மேலும், பாதுகாப்பை பலப் படுத்த கூடுதலாக ரூ.2 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ஏழுமலை யானுக்கு நைவேத்தியம் படைக்க இயற்கை முறையில் தயாரிக்கப் பட்ட நெய்யை உபயோகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இயற்கை நைவேத்திய முறையில் பக்தர் களும் பங்கேற்கலாம். இது நவநீத சேவை என அழைக்கப்படும். இது விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், திருமலையில் தங்கும் விடுதிக்கு தற்போது மீண்டும் முன்பணம் செலுத்தும் டெபாசிட் முறையை தேவஸ் தானம் அமல்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT