Published : 02 Aug 2021 02:09 PM
Last Updated : 02 Aug 2021 02:09 PM
பிரதமர் நரேந்திர மோடி, அம்ருத் மஹோத்சவத்தை கொண்டாடும் இத்தருணத்தில், இந்தியா புதிய சிகரங்களை எட்டுவதை உறுதி செய்வதற்கு 130 கோடி இந்தியர்களும் தொடர்ந்து கடினமாக உழைப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"அம்ருத் மஹோத்சவத்தின் துவக்கத்தைக் குறிக்கும் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில், ஒவ்வொரு இந்தியரையும் நெகிழச் செய்யும் பல்வேறு நிகழ்வுகளை நாம் காண்கிறோம்.
தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதிக ஜிஎஸ்டி வசூல் வலுவான பொருளாதார செயல்பாடுகளைக் குறிக்கிறது.
ஒலிம்பிக்கில், பி.வி.சிந்து அவர் தகுதிக்கேற்ப பதக்கத்தை வென்றது மட்டுமல்ல, ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி விளையாட்டுக் குழுவினரின் வரலாற்று செயல்பாடுகளையும் நாம் பார்க்கிறோம்.
அம்ருத் மஹோத்சவத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில், இந்தியா புதிய சிகரங்களை எட்டுவதை உறுதி செய்வதற்கு 130 கோடி இந்தியர்களும் தொடர்ந்து கடினமாக உழைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்"
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT