Published : 01 Aug 2021 06:52 PM
Last Updated : 01 Aug 2021 06:52 PM
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவையடுத்து கேரளாவின் குதிரன் சுரங்கத்தின் ஒரு பகுதி இன்று போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.
கேரள மாநிலத்தின் முதல் சுரங்க சாலையான இதன் வாயிலாக தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கான இணைப்பு பெருமளவு மேம்படும். பீச்சி-வசஹனி வன உயிரின சரணாலயம் வழியாக செல்லும் வகையில் 1.6 கிலோமீட்டர் தூர சுரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வன உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வடக்கு மற்றும் தெற்கு வழித்தடங்களில் உள்ள முக்கியமான துறைமுகங்கள் மற்றும் நகரங்களிடையேயான சாலை இணைப்பை இந்த சுரங்கம் வலுப்படுத்தும்.
கேரளாவில் உள்ள குதிரன் சுரங்கத்தின் ஒரு பகுதியை பயன்பாட்டிற்கு திறந்துவிடுமாறு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர் ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டில் மாறி வரும் உள்கட்டமைப்பு வசதிகள், ஒவ்வொரு குடிமகனுக்கும் சிறந்த பொருளாதார வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது’’ என்று கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவை தொடர்ந்து குதிரன் சுரங்கத்தின் ஒரு பகுதி இன்று போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT