Published : 30 Jul 2021 01:00 PM
Last Updated : 30 Jul 2021 01:00 PM

‘‘உங்கள் கருத்து செங்கோட்டையில் எதிரொலிக்கட்டும்’’ - மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடி - கோப்புப் படம்

புதுடெல்லி

சுதந்திர தினத்தன்று பிரதமர் ஆற்ற இருக்கும் உரையில் இடம் பெறும் வகையில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அனுப்பலாம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திர தினம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுககு ஏற்பாடுகள் செய்து வருகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்றவுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தனது உரையில் 130 கோடி இந்தியர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என மோடி கோரி வருகிறர். இதற்காக தனது சுதந்திர தின உரையில் இடம்பெற வேண்டிய கருத்துகளை பகிர்ந்து கொள்ளும்படி கூறுவது வழக்கம்.

அதன்படி வரும் சுதந்திர தின உரையில் இடம்பெறவேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை தெரியப்படுத்தலாம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
பிரதமரின் சுதந்திர தின உரையில் சேர்க்க உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

உங்கள் கருத்துக்கள் செங்கோட்டை கொத்தளத்தில் எதிரொலிக்கட்டும்.
ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி பிரதமர் @narendramodi ஆற்ற இருக்கும் உரையில் உங்கள் பங்கு என்ன? அவற்றை @mygovindiaல் பகிருங்கள்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x