Published : 28 Jul 2021 12:40 PM
Last Updated : 28 Jul 2021 12:40 PM
கர்நாடகாவின் வளர்ச்சிக்கும், பாஜகவின் வெற்றிக்கும் எடியூரப்பா ஆற்றியுள்ள பணிகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
கர்நாடக முதல்வராக இருந்த பி.எஸ்.எடியூரப்பாவுக்கு 78 வயது நிறைவடைந்ததால் பாஜக மேலிட உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் அவர் ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர், ஆட்சியமைக்க அழைப்புவிடுத்தார்.
இதன்படி இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில் கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் எடியூரப்பாவை பெருமை படுத்து விதமாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கதத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
கர்நாடகாவின் வளர்ச்சிக்கும், பாஜகவின் வெற்றிக்கும் எடியூரப்பா ஆற்றியுள்ள பணிகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. பல ஆண்டுகளாக அவர் கடுமையாக உழைத்தவர்.
கர்நாடகாவின் மூலை முடுக்கெல்லாம் பயணித்தார். மக்கள் வெள்ளத்தில் மூழ்கினார். சமூக நலத்திட்டங்கள் மீதான அவரது ஆர்வத்தால் மக்களால் எடியூரப்பா பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT