Published : 27 Jul 2021 07:26 AM
Last Updated : 27 Jul 2021 07:26 AM

கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குட்பட்ட டெம்சோக் பகுதியில் மீண்டும் சீனர்களின் கூடாரம்

புதுடெல்லி

இந்திய எல்லைக்குட்பட்ட கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் மீண்டும் சீனர்களின் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் சீன ராணுவ வீரர்கள் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி, கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றபோது இந்திய ராணுவம் தடுத்தது. இதில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டனர். இதனால் எல்லையில் அப்போது போர்ப்பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்குள்ள துருப்புகளை விலக்கிக் கொள்ளவும் இந்தியப் பகுதிகளில் இருந்து சீன ராணுவ வீரர்கள் வெளியேறுவது தொடர்பாகவும் அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து நடைபெற்ற 11 கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அங்கு பதற்றம் குறைந்துள்ளது. ஆனால் இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள் அங்கு தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு ள்ளனர்.

இந்நிலையில்தான் சீன ராணுவம், கிழக்கு லடாக்கில் பல இடங்களில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஏசி) கடந்து
உள்ளே வந்து விட்டது எனஅரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக ஓர் ஆங்கில நாளிதழ் செய்தி செய்தி வெளியிட்டது.

ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ராமற்றும் டெப்சாங் போன்ற மோதல் பகுதிகளில் ராணுவ குவிப்பை குறைக்க இரு நாடுகளும் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யியை, துஷன்பேவில் சந்திக்கவுள்ள நிலையில் இந்த செய்தி வெளியாகி உள்ளது.

இந்நிலையில்தான் கிழக்கு லடாக்கில் அமைந்துள்ள இந்தியப்பகுதியான டெம்சோக் பகுதியில் சீனர்களின் கூடாரங்கள் அமைக்கப்
பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது அப்பகுதியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் நிலையிலான 12வது சுற்று பேச்சுவார்த்தை நடத்த நேற்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஜூலை 26-ம் தேதி 1999-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதை நினைவு கூரும் வகையில், கார்கில் தினம் அனுசரிக்கப்படுகிறது எனவே இந்த பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க கேட்டுக் கொண்டது இந்திய அரசு. இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆனால் டெம்சோக் பகுதியில் சீனர்களின் கூடாரங்கள் அமைக்கப்பட்டு இருப்பது இந்திய அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி
யுள்ளது. டெம்சோக்கின் சார்டிங் நாலா பகுதியில் சீனர்கள் கூடா ரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் டெம்சோக் பகுதியில் கூடுதலாக பாதுகாப்பு, ரோந்துப் பணிகளை இந்திய ராணுவம் முடுக்கி விட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, “தற்போதுள்ள நிலவரப்படி நிலைமை ஸ்திரமாக உள்ளது. எந்த நிலைமை வந்தாலும் அதைச் சமாளிக்கப் போதுமான வசதிகள் நம்மிடையே உள்ளன. முக்கியமான அனைத்து இடங்களிலும் வீரர்கள் நிறுத்தப்பட் டுள்ளனர்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x