Published : 25 Jul 2021 01:22 PM
Last Updated : 25 Jul 2021 01:22 PM
நாட்டிலிருந்து இன்னும் கரோனா வைரஸ் இன்னும் போகவில்லை. ஆதலால், வருகின்ற பண்டிகை நாட்களில் மக்கள் சமூக விலகல், முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மறக்காமல் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 79-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
நாளை (26ம் தேதி) கார்கில் போர் நினைவுதினம் அணுசரிக்கப்படுகிறது. கார்கில் போர் என்பது நம்முடைய படை வீரர்களின் ஒழுக்கம், தியாகம் ஆகியவற்றைக் குறிக்கும், இந்த உலகமே இதைக் கண்டுள்ளது. இந்த நாளை இந்தியா அம்ருத் மகோத்சவ் என்று கொண்டாடுகிறது. இந்த நாளில் கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.
இந்தியா வளர்ச்சியை நோக்கி நடைபோட, அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். மத்திய அரசின் சார்பில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேயில் மன்கி பாத் நிகழ்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்கும் மக்களில் 75 சதவீதம் பேர் 35 வயதுக்குள் உள்ளவர்கள் எனத் தெரியவந்தது.
என்னால் அனைவரின் ஆலோசனைகளையும் பயன்படுத்த முடியாது என்பதால் நல்ல கருத்துக்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவிடுகிறேன். மன் கிபாத் நிகழ்ச்சியின் மூலம் இன்றைய இளையதலைமுறையின் எண்ணங்களை அறிய முடிகிறது. இந்த மாதமும் 30 ஆயிரம் கருத்துக்கள் வந்துள்ளன. எந்த நிகழ்ச்சிக்கும் இதுபோன்ற கருத்துக்கள் வந்ததில்லை.
இயற்கையையும், சுற்றுச்சூழலைப் பாராமரிப்பதும்,பேணுவதும் நம்முடைய கலாச்சாரமாகமும் அன்றாட வாழ்க்கையில் அடங்கியுள்ளது. மழைநீரின் மகத்துவத்தை உணர்ந்து, வானிலிருந்து வரும் ஒவ்வொரு துளி மழைநீரையும் பாதுகாக்க வேண்டும். இதை பராமரிப்பது நம்முடைய பாரம்பரியத்தில் இருக்கிறது. மழைநீர் பாதுகாப்பும், பருவநிலையும் நம்முடைய எண்ணங்களை, தத்துவங்களை, கலாச்சாரத்தை சீரமைக்கும்.
அடுத்துவரும் பண்டிகைகளுக்கு இப்போதே வாழ்த்துத் தெரிவிக்கிறேன். பண்டிகைக் காலத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபடும்போது, கரோனா நம்மைவிட்டுச் செல்லவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். கரோனா பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம், சமூகவிலகலைக் கடைபிடிக்க வேண்டும். மகிழ்ச்சியைகவும், ஆரோக்கியமாகவும் பண்டிகைகளைக் கொண்டாடுங்கள்
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் டோக்கியோவி்ல் நடக்கின்றன. இந்த நேரத்தில் நாம் நம்முடைய வீரர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். சமூக ஊடகங்களில் நம்முடைய ஒலிம்பிக் வீரர்களுக்கு ஆதரவளி்த்து உற்சாகப்படுத்த வேண்டும்.
ஒலிம்பிக்கில் வீரர்கள் தேசியக் கொடி ஏந்தி சென்றதைப் பார்த்தபோது நான் மட்டுமல்ல இந்த தேசமே உற்சாகமடைந்தது. ஒட்டுமொத்த தேசமும் ஒன்றாக இணைந்து, வீரர்களுக்கு வெற்றி கிடைக்கட்டும் என வாழ்த்த வேண்டும். ஒலிம்பி்க்கில் இந்தியாவின் வெற்றி ஏற்கெனவே தொடங்கிவிட்டு, அனைவரும்தங்களின் அபிமானமான வீரர்களின் வெற்றியை பகிர்ந்து இந்தியாவை உற்சாகப்படுத்த வேண்டும்.
தேசிய கைத்தறிநாள் விரைவில் வருகிறது. அனைவரும் தங்களால் முடிந்த அளவு கைத்தறி ஆடைகளை பிரபலப்படுத்த வேண்டும். காதி ஆடைகளின் புகழ் சமீபகாலங்களாக பிரபலமடைந்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு முதல் காதி ஆடைகளை அரசு ஊக்கப்படுத்தி வருவதை அறிவீர்கள். மன்கிபாத் நிகழ்ச்சியிலும் கதர் ஆடைகளைப் பற்றி பேசி வருகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT